For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்துடன் முதல் முறையாக சீனா ராணுவ பயிற்சி.. இந்தியாவிற்கு தலைவலி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பீஜிங்: சீனா மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். இது இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சீன பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் யங்க் யுஜூன் கூறுகையில், சீனா மற்றூம் நேபாளம் தங்களது போர் பயிற்சி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும், என்று தெரிவித்தார்.

China says to hold first military drills with Nepal next year

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ராணுவ பயிற்சி நடைபெறும் என்றும், நேபாள ராணுவ வீரர்கள் சர்வதேச குழுக்களில் செயல்படுது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளது. தற்போது முதல் முறையாக சீனாவுடன் பயிற்சியை மேற்கொள்கிறது.

ஏற்கனவே இந்தியாவின் தெற்கேயுள்ள இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இப்போது வடக்கேயுள்ள நேபாளத்தில் கால் வைக்க முயல்கிறது.

English summary
China will hold its first military drills with Nepal next year, China's Defence Ministry said on Thursday, in a move that could unnerve neighbouring India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X