கடலுக்கு மேலே 350 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில்! சீனாவின் தரமான சம்பவம்..வாயை பிளக்கும் உலக நாடுகள்
பெய்ஜிங்: சீனா கடலுக்கு மேலே பாலங்களை அமைத்து அதில் புல்லட் ரயிலை இயக்கி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் புல்லட் ரயில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனா தன்னை மீண்டும் முதலிடத்தில் நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது.
மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் ரயில்கள் என்பது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பாகும். ஒரு ஊரையே நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு கொண்டு சேர்க்கும் திறன் உள்ள ஒரு வாகனம்தான் ரயில். தொடக்கத்தில் நிலக்கரி சுரங்கத்திலும், போருக்காகவும் போடப்பட்ட இந்த ரயில் பாதைகள் மெல்ல மெல்ல மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. வந்த வேகத்திலேயே புதிய புதிய அவதாரங்களை இந்த ரயில்கள் எடுத்தது. தற்போது இது புல்லட் ரயில் எனும் பரிணாமத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜப்பான்தான் கோலோச்சியிருந்தது. ஆனால் தற்போது சீனா உருவாக்கியுள்ள புல்லட் ரயில்கள் ஒட்டு மொத்த உலக நாடுகளையே மெர்சலடைய வைத்துள்ளன. அந்த வகையில் நேற்று தென்கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவையை சீனா தொடங்கியது. இந்த ரயில் கடலுக்கு மேலே பயணிக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
தைவான் ஜலசந்தியின் மேற்கு கடற்கரையில் உள்ள புஜியன் நகரின் தலைநகர் ஃபுஜோ மற்றும் வணிக மையமான ஜியாமென் உட்பட 5 நகரங்களை இந்த ரயில் இணைக்கிறது. குறிப்பாக ஃபுஜோ-ஜியாமென் இடையே உள்ள 277 கி.மீ தொலைவை இந்த ரயில் வெறும் 55 நிமிடங்களில் கடக்கிறது. இந்த புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் 350 கி.மீ. இவ்வளவு வேகத்தில் ரயில் செல்கிறது எனில் அதற்கான பாதைகள் பலமாக இருப்பது அவசியமாகும்.
இந்த ரயில் பாதைக்கான கட்டமைப்புகளை சீனா கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த கட்டுமானங்கள் அனைத்தும் நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நீண்ட காலத்திற்கு இந்த வழியாக புல்லட் ரயில் இயக்கப்படும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். என்னதான் உலகின் சில நாடுகளில் இந்த புல்லட் ரயில் சேவைகள் இருந்தாலும், இந்த ரயில் தடத்தின் ஒட்டுமொத்த தூரங்களில் 3ல் 1 பங்கு சீனாவில்தான் இருக்கிறது.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த புல்லட் ரயில் பாதைகள் நீடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 2,500 கிமீ அளவுக்கு பாதைகள் நீடிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் புல்லட் ரயில் பாதையின் தூரம் 44,500 கிமீ ஆக அதிகரித்திருக்கிறது. இது 2025ம் ஆண்டில் 50,000 கி.மீ அளவுக்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications