For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்ய மீட்டிங்.. இந்தியாவின் அதே ராஜதந்திரத்தை கையில் எடுத்த சீனா.. ஷூட்டிங் புகார்.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா பயணம் மேற்கொள்வதற்கு முன் சரியாக லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. லடாக்கில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறி இருப்பதற்கு பின் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகங்கள் எழுகிறது.

லடாக்கில் தற்போது உச்சபட்ச பதற்றம் நிலவி வருகிறது. லடாக்கில் இந்திய படைகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியுள்ளது. பாங்காங் திசோ அருகே இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

சரியாக 50 வருடம் கழித்து எல்லையில் இப்படி துப்பாக்கி சூடு புகார் எழுந்துள்ளது. இந்தியா இந்த புகாருக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. சீனாவின் இந்த திடீர் புகாருக்கு பின்னணியில் வேறு சில காரணங்கள் உள்ளது என்கிறார்கள்.

எல்லையில் பதற்றம்.. இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு எல்லையில் பதற்றம்.. இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு

லடாக்

லடாக்

தொடக்கத்தில் இருந்தே லடாக் எல்லை பிரச்சனையில் உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவின் பக்கமே உள்ளது. அமெரிக்கா , ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று பல நாடுகள் இந்தியாவிற்குதான் ஆதரவாக இருந்து வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதான் இதற்கு காரணம். எப்போது எல்லையில் பிரச்சனை வந்தாலும், இந்தியா வெளிப்படையாக அது குறித்த விஷயங்களை வெளியிடும்.

உண்மையான முகம்

உண்மையான முகம்

லடாக்கில் சீனா அத்துமீறினால் அதை இந்தியா வெளிப்படையாக அறிவிக்கும். உலக நாடுகளுக்கு முன் சீனாவின் உண்மையான முகத்தை இந்தியா இத்தனை நாட்கள் அப்படித்தான் வெளிக்காட்டி வந்துள்ளது. அதிலும் எல்லை பிரச்சனை குறித்து பேசும் முதல் நாடாக இந்தியா எப்போதும் இருந்து வந்துள்ளது. 20 வீரர்கள் எல்லையில் வீரமரணம் அடைந்த போது கூட இந்தியாதான் முதல் நாடாக அதை தெரிவித்தது.

சீனா பொய்

சீனா பொய்

இதில் இன்னும் சீனா உண்மையை தெரிவிக்கவில்லை. உலக நாடுகள் முன் உண்மையை தெரிவித்து, இந்தியா தனக்கான ஆதரவை திரட்டி வந்துள்ளது. இந்தியாவின் வெளிப்படைத்தன்மையும் கூட உலக நாடுகளின் ஆதரவுக்கு முக்கிய காரணம் ஆகும். இதற்கு முன் டோக்லாம் பிரச்சனையையும் இந்தியா இதேபோல்தான் கையாண்டது. டோக்லாம் பகுதியில் சீனா அத்துமீற முயல்கிறது என்று இந்தியா வெளிப்படையாக உலக நாடுகளுக்கு அறிவித்தது. உலக நாடுகள் முன் அம்பலப்பட்டு போன காரணத்தால், வேறு வழி இன்றி டோக்லாம் பிரச்சனையில் சீனா பின் வாங்க தொடங்கியது.

சண்டை இல்லை

சண்டை இல்லை

பல மாத பேச்சுவார்த்தை மூலம் சின்ன சண்டை கூட நடக்காமல் டோக்லாம் பிரச்னையை இந்தியா முடிவிற்கு வந்தது. சீனாவை குற்றவாளியாக்கி, உலக நாடுகள் முன் அதை நிறுத்தி, இந்தியா சீனாவிற்கு அழுத்தம் கொடுத்தது. தற்போது அதே முறையை சீனா கையில் எடுத்துள்ளது. இந்தியா எப்படி சீனாவை கையாண்டதோ அதே முறையை தற்போது சீனா கையில் எடுத்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தியது

துப்பாக்கி சூடு நடத்தியது

அதன்படி உலக நாடுகள் முன் இந்தியாதான் குற்றஞ்செய்கிறது என்று நிறுவ சீனா முயற்சிக்கிறது. அதனால்தான் எல்லையில் இந்தியா அத்துமீறுகிறது. எல்லையில் தேவையில்லாமல் இந்தியாதான் சீண்டுகிறது என்று சீனா கூறி வருகிறது. ஒருபடி மேலே போய், எல்லையில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியுள்ளது. இந்தியாதான் எல்லையில் அமைதியை குலைக்க முயல்கிறது என்று சீனா கூற தொடங்கி உள்ளது.

என்ன கனவு

என்ன கனவு

இதன் மூலம் இந்தியாவை குற்றவாளி போல சித்தரிக்கலாம் என்று சீனா கனவு காண்கிறது. டோக்லாமில் இந்தியா செய்ததை, பாங்காங் திசோவில் இந்தியாவிற்கு சீனா செய்ய பார்க்கிறது. அதுவும் சரியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா பயணம் மேற்கொள்வதற்கு முன் சரியாக லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரஷ்ய மீட்டிங்கில் 8 நாடுகளுக்கு முன் இந்தியாவை கேள்வி எழுப்பலாம் என்று சீனா நினைக்கிறது.

ரஷ்ய மீட்டிங்

ரஷ்ய மீட்டிங்

ரஷ்ய மீட்டிங்கில் இந்த துப்பாக்கி சூட்டை குறிப்பிட்டு இந்தியாவை வழிக்கு கொண்டு வரலாம் என்று சீனா நினைக்கிறது. கடந்த முறையும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்லும் முன் சரியாக எல்லையில் சீனா பிரச்சனை செய்தது. தற்போது அதேபோல் ரஷ்ய மீட்டிங்கிற்கு முன் சீனா பிரச்சனை செய்துள்ளது. ரஷ்யாவின் மத்தியச பேச்சுவார்த்தை மூலம் லடாக்கில் தனது வலிமையை உயர்த்திக் கொள்ளலாம் என்று சீனா நினைக்கிறது.

English summary
China uses India's very old method to get leverage in the Ladakh issue by accusing Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X