100க்கு 6 மார்க்கா.. நா சொல்லி கொடுத்ததெல்லாம் வேஸ்ட்.. கதறி அழுத தந்தை வீடியோ வைரல்!
மகனின் மதிப்பெண்களைப் பார்த்து தந்தை அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெய்ஜிங்: மகன் கணக்கில் வாங்கிய மதிப்பெண்களைப் பார்த்து, தந்தை ஒருவர் தேம்பித் தேம்பி அழும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
'பள்ளிக்குச் செல்ல மாட்டேன்.. படிக்க மாட்டேன்.. வீட்டுப்பாடம் எழுத மாட்டேன்..' என குட்டி குட்டிக் குழந்தைகள், சமயத்தில் பெரிய பிள்ளைகள் அழுது வைரலான வீடியோக்கள் பலவற்றைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு தந்தை மகனுக்காக அழுத வீடியோவைப் பார்த்திருக்கிறீர்களா? இப்போது இணையத்தில் அதுதான் வைரல் வீடியோ.
அந்த தந்தையின் அழுகைக்கான காரணம் தெரிந்தால், நீங்களும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்...

வைரல் வீடியோ
வைரலாகியுள்ள வீடியோவில் ஒருவர், தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்க, பின்னால் ஒரு பெண்ணின் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. "இனி நான் எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். என்னுடைய அனைத்து முயற்சிகளும் வீணாகி விட்டது. இனி அவன் தானாகவே போராடி பார்த்துக் கொள்ளட்டும்" என அந்நபர் அழுது கொண்டே கூறுகிறார்.

குறைவான மதிப்பெண்
வீடியோவில் இருப்பவர் சீனாவின் ஸெங்ஸூ என்னும் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவரின் மகனுக்கு, 'கூட்டிக் கழித்துப் பார்த்தாலும்..' கணக்கு சரியாகவே வரவில்லையாம். இதனால் பள்ளியில் நடத்தப்பட்ட கணக்குத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறாமல், மிகவும் குறைவாகவே மதிப்பெண்களைப் பெற்று வந்துள்ளார்.

வீட்டிலேயே டியூசன்
இதனால் வீடியோவில் இருக்கும் நபர், தானே களத்தில் இறங்கி, வீட்டில் டியூசன் வாத்தியாராகி விட்டார். கடந்த பல மாதங்களாக பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர், கணக்கு பாடத்திற்கு மட்டும் அந்த நபரே மகனுக்கு முழு நேரமும் வகுப்பு எடுத்து வந்ததாகத் தெரிகிறது. அதிக கண்டிப்புடன், நிறைய எதிர்பார்ப்புடன் மகனுக்கு கணக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார் அந்தத் தந்தை.

பொய்த்துப் போன எதிர்பார்ப்பு
தனது உழைப்பு வீண் போகாது, இம்முறை தன் மகன் நிறைய மதிப்பெண் வாங்குவான் என எதிர்பார்த்துள்ளார். ஆனால் அவரது எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அச்சிறுவன் இம்முறை நடந்தத் தேர்வில் நூறுக்கு ஆறு மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்து போய்தான், அப்படித் தேம்பி தேம்பி அழுதார் அந்தத் தந்தை.

சிரிப்பிற்கு காரணம்
ஆனால் இதனை ஏன் அவரது மனைவி சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்துள்ளார் என்பதன் பின்னணியிலும் ஒரு கதை உள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட அந்தச் சிறுவன் கணக்குப் பாடத்தில் மக்கு மாணவன் இல்லை. நூறுக்கு 50 அல்லது 60 மதிப்பெண்கள் எடுத்து வந்துள்ளான். ஆனால் அவனை நூற்றுக்கு நூறு வாங்க வைக்கிறேன் என முயற்சி செய்துதான், இப்போது ஆறு மதிப்பெண்கள் வாங்க வைத்திருக்கிறார் அந்தத் தந்தை.
பெற்றோர்களுக்கான பாடம்
பெற்றோர்கள் குழந்தைகள் மீது கொடுக்கும் அதிகப்படியான அழுத்தம், இப்படியான பின்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமே நல்லதொரு உதாரணம். வேடிக்கையாக இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டாலும், 'இப்படிப்பட்ட அழுத்தத்தை மாணவர்கள் மீது செலுத்தாதீர்கள்.. அவர்களை அவர்களாகவே வளர விடுங்கள்' என்ற கருத்தையும் சொல்ல மறக்கவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications