For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதுக்கு "அதை"ப் போய் ஷேவ் செஞ்சுக்கிட்டு.. இணையத்தைக் கலக்கும் சீனப் பெண்கள்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் சீனப் பெண்கள் இணையதள பிரசாரம் ஒன்றில் படு வேகமாக கலந்து கொண்டு பரபரப்பூட்டி வருகின்றனர்.

மேட்டர் பெரிதாக ஒன்றும் இல்லை. அக்குள் முடியை ஷேவ் செய்ய வேண்டாம் என்பதுதான் இந்த பிரசாரம்.

இப்போது இந்த பிரசாரம் வைரல் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சீனப் பெண்கள் இதில் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர்.

படம் போடுங்கம்மா

படம் போடுங்கம்மா

பல சீனப் பெண்கள் தங்களது ஷேவ் செய்யப்படாத அக்குளைப் படம் எடுத்துப் போட்டு டிவிட்டரின் சீன வெர்ஷன் ஆன வெய்போவை கலங்கடித்து வருகின்றனர்.

செல்பிகளின் குவியல்

செல்பிகளின் குவியல்

வெய்போவில் தினசரி ஏராளமான பெண்களின் ஷேவ் செய்யப்படாத அக்குள் படங்கள் வந்து குவிகின்றனவாம். எல்லாமே பெரும்பாலும் செல்பிகள்தான்.

ஆயிரக்கணக்கில்

ஆயிரக்கணக்கில்

இதுவரை ஆயிரக்கணக்கில் இந்தப் புகைப்படஙக்கள் குவிந்து விட்டனவாம். இதைப் பார்க்க கூட்டம் அலை மோதுகிறது.

இதுல டாப் 10 வேற

இதுல டாப் 10 வேற

இந்த பிரசாரத்தில் கலந்து கொண்டு இடம் பெறும் புகைப்படங்களில் டாப் 10 படங்களைத் தேர்வு செய்து பட்டியல் வெளியிடவும் விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

ஆனால் பரிசில் கிடையாது பாஸ்!

ஆனால் பரிசில் கிடையாது பாஸ்!

ஆனால் பரிசு எதுவும் தரப்பட மாட்டாதாம். ஷேவ் செய்யப்படாத சிறந்த அக்குள் என்ற பெயர் மட்டும் அந்தப் படத்துக்கும், அதை எடுத்தவருக்கும் கொடுக்கப்படுமாம்.

டம்பளர் ஆரம்பித்து வைத்தது

டம்பளர் ஆரம்பித்து வைத்தது

கடந்த ஆண்டு ஷேவ் செய்யப்படாத பெண்களின் கால்கள் என்று ஒரு நூதனத்தை டம்பளர் ஆரம்பித்து வைத்து பரபரப்பைக் கிளப்பியது. இந்த வருடம் வெய்போவில் "பொங்கல்" வைத்து வருகிறார்கள் இவர்கள்.

சீனப் பெண்கள் மட்டுமல்ல

சீனப் பெண்கள் மட்டுமல்ல

இந்த பிரசாரத்தில் சீனப் பெண்கள் மட்டுமல்லாமல் பிற நாட்டுப் பெண்களும் கூட கலந்து கொண்டு வருகின்றனராம். அரிஸோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் ஒரு செமஸ்டர் முழுவதும் ஷேவ் செய்யாமல் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

மெயில்தான் காரணம்

மெயில்தான் காரணம்

சீனாவைச் சேர்ந்த பிரபல பெண் மனித உரிமை ஆர்வலர் ஸியோவோ மெய்லிதான் இந்தப் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தவர் ஆவார். அவர் கூறுகையில், அக்குள் முடியை எடுப்பதா, வைத்திருப்பதா என்பதில் பெண்களுக்கு குழப்பம் உள்ளது. இதில் சமூ கட்டுப்பாடு கூடாது என்பதற்காகவே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கினோம் என்றார்.

கன்பூசியஸ் வழியில்

கன்பூசியஸ் வழியில்

மேலும் அவர் கூறுகையில் உடலில் முடி வளர்வது ஆண்மையின் அடையாளம் என்கிறார்கள். ஆனால் கன்பூசியஸ் என்ன சொல்கிறார் என்றால், தாய் தந்தை கொடுத்த இந்த உடல், முடி, தோல் ஆகியவற்றை தொந்தரவு செய்யக் கூடாது என்கிறார்.

எதிர்ப்பும் வருகிறது

எதிர்ப்பும் வருகிறது

ஆனால் இந்தப் பிரசாரத்திற்கு சில பெண்கள் எதிர்ப்பும் தெரிவிக்கத் தவறவில்லை. இது என்ன வினோதமான போட்டி. எனக்கு முடி வளர்ந்தால் அது சங்கடமாக இருக்கும். எனவே எடுக்கிறேன். இதில் யார் தலையிடுவது என்று கேட்டுள்ளார் ஒரு பெண்.

ஷேவ் செய்யாம எப்படி

ஷேவ் செய்யாம எப்படி

இன்னொரு பெண் கூறுகையில், ஆணோ, பெண்ணோ, அக்குளில் முடி வளர்ந்தால் ஷேவ் செய்துதான் ஆக வேண்டும். அது அழகோ இல்லையோ, நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல என்றார்.

என்னென்ன பஞ்சாயத்தையெல்லாம் கூட்டுறாங்கப்பா!

English summary
Chinese women in the UK have joined an online debate about shaving their armpits. Supporters of the viral campaign are posting pictures of their underarm hair in a contest which is also sweeping China's version of Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X