For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலானி பற்றி ஒரு செய்தி.. அட இவர் அவர் இல்லீங்க.. சீனாக்காரர்.. மேட்டர் என்னென்னா!

சீன பெண் நிலானி தமிழில் பேசி அசத்தும் வீடியோ வைரலாகிறது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: "நம்ளே வாங்க.. வாங்க.. இங்க ஒரு ஃபிரஷ்ஷான பழா கடை இருக்கு.." என்று ஒரு வீடியோவில் பெண் பேசுகிறார்.

நம்ம ஊர் டிவி காம்ப்பியர்களை விட ரொம்ப அழகா தமிழ் பேசுறாரே யாருன்னு பார்த்தால் பேர் நிலானியாம்... ஊர்.. ஸாரி நாடு சீனாவாம்!!

பழ மார்க்கெட்

பழ மார்க்கெட்

சீன பெண் நிலான பேசும் தமிழ்தான் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நிலானி அங்குள்ள ஒரு மார்க்கெட் பகுதிக்கு செல்கிறார். கூடவே நம்மையும் அதாவது நேயர்களையும் அழைத்து செல்கிறார். அந்த மார்க்கெட் பெயர், அங்கிருக்கும் பொருட்களை தமிழில் கூறி அறிமுகப்படுத்துகிறார்.

இளநீர் - அறிமுகம்

இளநீர் - அறிமுகம்

அது ஒரு பழ மார்க்கெட்!! "நம்ளே வாங்க.. வாங்க.. இங்க ஒரு ஃபிரஷ்ஷான பழா கடை இருக்கு.. எல்லா பழங்களும் இங்கே கிடைக்கும்" என்று சொல்லிக் கொண்டே அங்குள்ள கடை ஒன்றில் இருந்த இளநீரை எடுத்து கையில் வைத்து கொள்கிறார். அந்த இளநீர் நம்ம ஊர் இளநீர் போல இல்லை. வெட்டப்பட்டு, அப்படியே எடுத்து ஸ்ட்ரா போட்டு குடிக்கும்படிதான் ரெடியாக வைத்திருக்கிறார்கள்.

இளநீர் பெருமை

இளநீர் பெருமை

அந்த இளநீரை கையில் வைத்து கொண்டு நிலானி பேசுகிறார், "இது என்னான்னு பாத்தீங்கன்னா இளாநீர்.. தமிழ்நாட்டில் தினசரி 2 இளநீரு குடிப்பது வழக்கம்" என்று சொல்கிறார். நம்ம ஆளுங்களுக்கு இளநீர் அருமை எத்தனை பேருக்கு தெரியும்? குறிப்பாக குழந்தைங்க பெப்சி, கோக் தேடி ஓடும்போது, வேற நாட்டு பெண், நம்ம ஊரு இளநீர் பெருமையை சொல்வது அலாதி பெருமையாக இருக்கிறது.

இனிமையோ இனிமை

அதிலயும் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழில் இளநீரை பற்றி சொல்வது இளநீரின் ருசியை விட இனிமையாகவே இருக்கிறது... தமிழ் எப்படி பேசினாலும், யார் பேசினாலும், இனிமைதானே!! நன்றி நிலானி!!

English summary
Chinese young Lady speaks Tamil Sweetly goes Viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X