For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தனை மாதங்களுக்கு பின்.. சீன துறைமுகத்தை மிரட்டும் கொரோனா.. மொத்தமாக சீல்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஒரே ஒரு கொரோனா வைரஸ் கேஸ் காரணமாக சீனாவில் மிகப்பெரிய துறைமுகம் ஒன்று மொத்தமாக மூடப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் ஏற்படாத நிலையில் திடீரென எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கேள்விகளை எழுப்பி உள்ளது.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Coronavirus.. தடுக்க முடியாமல் விழிபிதுங்கும் China

    2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியது. அதிகாரபூர்வமாக 2019 டிசம்பர் மாதத்தில்தான் கொரோனா பரவியது என்றாலும் கூட உண்மையில் கொரோனாவின் தோற்றம் எங்கிருந்து தொடங்கியது, எப்படி பரவல் ஆரம்பித்தது, பேஷண்ட் ஜீரோ யார், இதன் தோற்றம் இயக்கையானதா, செயற்கையானதா என்று யாருக்கும் இதுவரை தெரியாது.

    கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த அமெரிக்கா பாதுகாப்பு துறையின் விசாரணையும் இன்னும் முடியவில்லை. கொரோனா வைரஸ் முதலில் பாதித்த சீனாவில் சில மாதங்களிலேயே பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. மற்ற நாடுகளில் பரவல் ஏற்பட தொடங்கிய நிலையில் சீனாவில் 1 லட்சம் கேஸ்களை தொடுவதற்கு முன்பே பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

    தொடங்கியது பரிசோதனை.. கொரோனா சிகிச்சைக்கு மேலும் 3 மருந்துகள்.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்புதொடங்கியது பரிசோதனை.. கொரோனா சிகிச்சைக்கு மேலும் 3 மருந்துகள்.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

    கொரோனா பரவல்

    கொரோனா பரவல்

    சீனாவில் தற்போதைய நிலவரப்படி மொத்தமாக 94,161 கேஸ்கள் மட்டும் கடந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்டுள்ளது. அதிலும் 1,836 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே தற்போது நிலவரப்படி சீனாவில் உள்ளது. இந்த கேஸ்கள் கூட கடந்த ஒரு மாதமாக ஏற்பட்ட கேஸ்கள்தான். அதற்கு முன் சீனாவில் ஒரு மாதத்தில் மொத்தமாக 10 கேஸ்கள் வந்தால் கூட அது ஆச்சர்யம்தான். அந்த அளவிற்கு சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

    வுஹன்

    வுஹன்

    அதிலும் முதல் பரவல் தொடங்கிய வுஹன் நகரத்தில் கூட லாக்டவுன் திறக்கப்பட்டுவிட்டது. அங்கு வேக்சின் விநியோகமும் அதிகரித்துவிட்டதால் பல்வேறு பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா காரணமாக இதுவரை ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கையே 4,636தான். அந்த அளவிற்கு அங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டு, மொத்தமாக வைரஸ் பரவல் தடுக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பு

    தடுப்பு

    இந்த நிலையில்தான் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உலகின் மூன்றாவது பெரிய துறைமுகமான நிங்போ சுவாசான் துறைமுகம் மூடப்பட்டு உள்ளது. சீனாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகவும், உலகின் மூன்றாவது பெரிய துறைமுகமாகவும் இது பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க வர்த்தக பணிகளை இந்த துறைமுகத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் கூட இங்கு 1.2 டன் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டது.

    மூடல்

    மூடல்

    ஆனால் இவ்வளவு பெரிய துறைமுகத்தை கொரோனா பரவலால் சீனா சீல் வைத்துள்ளது. அங்கு உள்ள ஒரே ஒரு ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தமாக துறைமுகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல லட்சம் கோடி அந்த நாட்டிற்கு இழப்பு ஏற்படும். ஆனாலும் கொரோனா பரவலை சீரியஸாக எடுத்துக்கொண்டு அந்த நாடு, துறைமுகத்திற்கு சீல் வைத்துள்ளது. அங்கு 2000க்கும் அதிகமான ஊழியர்கள் எல்லோருக்கும் இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுவிட்டது.

    வேக்சின்

    வேக்சின்

    கொரோனா பாதிக்கப்பட்ட இவருக்கும் வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி இவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த துறைமுகத்தில் வேலை பார்த்த எல்லோரும் இப்போது மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எல்லோருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஒரு வருடம் முழுக்கவே பெரிதாக எங்கும் லாக்டவுன் போடப்படவில்லை.

    ஆனால் லாக்டவுன்

    ஆனால் லாக்டவுன்

    பெரிய அளவில் எங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. ஆனால் இந்தமுறை நிங்போ சுவாசான் துறைமுகத்தில் ஏற்பட்ட பாதிப்பை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு சீனா லாக்டவுன் போட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் இடம் என்பதால் சீனா இதை சீரியஸாக அணுகுகிறதா அல்லது இதற்கு வேறு காரணம் ஏதேனும் இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. என்ன இருந்தாலும் இத்தனை மாதங்களுக்கு பின் அங்கு மீண்டும் கேஸ்கள் லேசாக உயர தொடங்கி உள்ளது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Coronavirus: China's largest Ningbo-Zhoushan port sealed after a person tested positive. All the 2000 workers were isolated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X