சொகுசு ஹோட்டல்.. மொத்தம் 20 அழகிகள்.. விரைந்து வந்து ஐக்கியமான துணைவி.. இப்படியும் ஒரு மன்மத "ராசா"!
துணைவியை சிறையில் இருந்து விடுவித்துள்ளார் தாய்லாந்து மன்னர்
பெர்லின்: ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்.. அவருக்கு சொந்தமாக மொத்தம் 20 அழகிகளாம்.. இதை தவிர மனைவி, துணைவிகள் இருக்கிறார்கள்.. ஒரு ஸ்டார் ஹோட்டலில் இந்த ராஜா, மொத்த அழகிகளுடன் உல்லாசமாக இருந்து வருகிறார்.. இதை நினைத்து தாய்லாந்து நாட்டு மக்கள் விசனத்தில் உள்ளனர்!
தாய்லாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தமது துணைவிக்கு மன்னிப்பு வழங்கி, ஜெர்மனியில் தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார் தாய்லாந்து மன்னர்.

தாய்லாந்து நாட்டு மன்னன் பெயர் மகா வஜிரலோங்க்கோர்ன்.. 68 வயசாகிறது.. இவர் நாட்டில் தொற்று அதிகமாக வரவும், அவர் மட்டும் மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஜெர்மனிக்கு வந்துவிட்டார்.
கடந்த பிப்ரவரியில் இருந்து ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் உள்ளார்.. தன்னுடைய ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார். அந்த மன்னனுடன் 20 அழகிகள் தங்கியிருக்கிறார்களாம்.. ராஜா செம ஜாலியாக இந்த அழகிகளுடன் பொழுதை கழித்து வருகிறார்.
நிலைமை இப்படி இருக்க, ராஜாவின் 4-வது மனைவி சுதிடா என்பவர், சுவிட்சர்லாந்தில் அவர் பாட்டுக்கு ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறாராம்.. அதேபோல இந்த ராஜாவின் துணைவி பெயர் சினீனாட் வோங்வாஜிரபக்தி.. அவருக்கு 35 வயசாகிறது.. அதாவது மனைவி வேறு, துணைவி வேறு!
மன்னரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர்தான் இந்த துணைவி சினீனாட்.. கடந்த வருடம் ராஜாவுக்கு 67-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.. அப்போதுதான் சினீனாட் துணைவியாக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு பிறகு ஒரு தாய்லாந்து மன்னர் தமது துணைவியை தேர்வு செய்து இதுவே முதல் முறையாகும்.
ஆனால், இப்படி தேர்வு செய்யப்பட்ட அடுத்த 3 மாசத்திலேயே அவருக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த பொறுப்புகளும், பதவிகளும் பறிக்கப்பட்டது.. இதற்கு காரணம், ராஜாவுக்கு விசுவாசமாக சினீனாட் நடந்து கொள்ளவில்லையாம்.. ராணியின் பதவிக்கும் ஆசைப்பட்டுள்ளார்.. இதுதான் அந்த மன்னருக்கு பிடிக்கவில்லை. அதனால் அதிக பாதுகாப்பு மிகுந்த ஜெயிலிலும் அடைத்துவிட்டார்.
அதுமட்டுமில்லை, 68 வயசு ராஜாவை இந்த துணைவி மதிக்கவே இல்லையாம்.. அரச பாரம்பரியங்களையும் மீறிவிட்டாராம்.. இப்படி பல குற்றச்சாட்டுகளை அரண்மனை தரப்பு கூறி, புது மனைவியை ஜெயிலில் அடைத்தது. இந்நிலையில், அவரை விடுதலை செய்திருக்கிறது.. உடனடியாக ஜெர்மனிக்கு செல்லவும் உத்தரவு வந்தது.. இந்த உத்தரவை ஏற்று, புது மனைவி 68 வயசு ராஜாவை தேடி ஜெர்மனிக்கு சென்றிருக்கிறார்..
இவ்வளவு நாட்கள் பிரிந்திருந்த ஏக்கமோ என்னமோ, ஏர்போர்ட்டுக்கு ராஜாவே வந்துவிட்டார்... துணைவியை வரவேற்று ஹோட்டலுக்கு அழைத்து சென்றாராம்.. ஏற்கனவே 20 அழகிகள் அந்த ஹோட்டலில் ஜாலியாக உள்ள நிலையில், அவர்களுடன் ஒருவராக ஐக்கியமாகி உள்ளார் சினீனாட்.. ஆக மொத்தம் 21.. சியர்ஸ்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications