For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திகில் படங்களை மிஞ்சும் கொடூரம்.. ஜப்பான் கப்பலில் 61 பேருக்கு கொரோனா.. கடலில் தவிக்கும் 3500 பேர்!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மொத்தம் 61பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நடு கடலில் தவிக்கும் 3500 பேர்.. வேகமாக பரவும் கொரோனா.. திரில்லர் படங்களை மிஞ்சிய பயங்கரம் - வீடியோ

    டோக்கியோ: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மொத்தம் 61பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    ஜப்பானில் கப்பல் ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர்.

    கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது. முதலில் ஒருவருக்குதான் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்தது.

    பலி எண்ணிக்கையை மறைக்கிறது.. சீன அரசு பொய் சொல்கிறது.. கொதிக்கும் உள்நாட்டு மக்கள்.. புகார்!பலி எண்ணிக்கையை மறைக்கிறது.. சீன அரசு பொய் சொல்கிறது.. கொதிக்கும் உள்நாட்டு மக்கள்.. புகார்!

    உறுதி செய்யப்பட்டது

    உறுதி செய்யப்பட்டது

    ஜப்பான் வந்த அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது. தற்போது இது உள்ளே இருக்கும் நபர்களுக்கு வேகமாக பரவி வருகிறது.நேற்று இந்த வைரஸ் 20 பேருக்கு பரவியது. இன்றும் இன்னும் 40 பேருக்கு பரவி உள்ளது. மொத்தம் 61 பேருக்கு வைரஸ் தாக்குதல் உள்ளது. இவர்கள் எல்லோரும் அங்கே தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    முடியவே முடியாது

    முடியவே முடியாது

    நேரமாக நேரமாக இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் பரவிக்கொண்டே இருக்கிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு போதிய மருந்து வசதிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பான் மருத்துவர்கள் கரையில் இருந்து சென்று அங்கு சிகிச்சை அளித்து திரும்பி வருகிறார்கள். அந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. இந்த கப்பலை கண்டிப்பாக தங்கள் எல்லைக்குள் விட முடியாது என்று ஜப்பான் கூறிவிட்டது. இதனால் 3500 பேரின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மக்கள் கோரிக்கை

    மக்கள் கோரிக்கை

    இவர்களை உள்ளே விட வேண்டும் என்று ஜப்பான் மக்கள் பலர் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். நாம் மனிதர்களாக செயல்பட வேண்டும். 61 பேருக்கு மட்டும்தான் நோய் தாக்குதல் உள்ளது. நோய் தாக்காத மற்ற நபர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் கப்பலில் இருக்கும் எல்லா நபர்களுக்கும் நோய் பரவும். அங்கு இருக்கும் எல்லோருக்கும் நோய் பரவும். இது பெரிய கொடூரமாக மாறும் என்று ஜப்பான் மக்கள் எச்சரித்துள்ளனர்.

    என்ன அச்சம்

    என்ன அச்சம்

    அதேபோல் கப்பலுக்கு உள்ளேயும் தற்போது அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளாகாத பயணிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எங்களை ஏன் இவர்களுடன் வைத்து இருக்கிறீர்கள். நாங்களும் இவர்களுடன் சாக வேண்டுமா என்று அவர்கள் கேட்டு வருகிறார்கள். உள்ளே கலவரம், சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Totally 61 passengers confirmed with the attack in the secluded Japan ship so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X