இந்தியாவுக்கு வெற்றி: குல்பூஷன்சிங் ஜாதவ் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
தி ஹேக்: குல்பூஷண் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் சவுக்கடி கொடுத்தார் நீதிபதி.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ் . இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், வேவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

மேலும் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில் குல்பூஷணுக்கு கடந்த மாதம் 10-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதை இந்தியா கடுமையாக கண்டித்தது. மேலும் அவரை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளும் அனுமதி மறுத்தது. குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான தீர்ப்பு நகலையும் இந்திய அரசிடம் அளிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. மேலும் எந்த வித பின்விளைவுகளையும் சந்திக்க தயார் என்று பாக். பிரதமர் நவாஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் சிங்கின் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ஜாதவ் வழக்கை விசாரிக்க சர்வதேச கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. அவரை சந்திக்கவும் இந்திய தூதரகத்துக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.
வியன்னா சாசனத்தை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை. எனவே குல்பூஷனுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
அதன் மீதான விசாரணை இன்று நெதர்லாந்தில் ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தில் 3.30 மணிக்கு தீர்ப்பு வாசிக்க தொடங்கியது. சுமார் 11 நீதிபதிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது சர்வதேச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வாசிக்க தொடங்கினார்.
அதில், ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறாகும். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை ஜாதவ் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications