உலகில் கொரோனாவால் 20.75 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒரே நாளில் 1.33 லட்சம் பேருக்கு கொரோனா
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 63,809 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 207,541,683 பேராக அதிகரித்துள்ளது.

உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.
கடந்த சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது. ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 59,463 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 186,039,217 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் 37,435,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 30,144,609 பேர் மீண்டுள்ளனர். 6,653,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 637,439 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 32,192,576 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 431,253 பேராகும். ஒரே நாளில் 622 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 31,376,015.
பிரேசில் நாட்டில் மொத்தம் 20,350,142 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் 62 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா உள்ளது. இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 19,195,514 ஆகும்.
உலக கொரோனா பாதிப்பில் 7வது இடத்தில் உள்ள துருக்கியில் 60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜென்டினா 8வது இடத்தில் உள்ளது. அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 94,379 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications