இலங்கை விமான நிலையத்தில் 150 தமிழர்கள் தவிப்பு.. “உணவு கூட கிடைக்கல”.. சென்னைக்கு வர முடியாமல் அவதி!
கொழும்பு: இலங்கை விமான நிலையத்தில் 150 தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கடந்த 3 நாட்களாக எந்தவித வசதியும் இன்றி தவித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கொழும்புவில் 150 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் தவித்து வருவதால், தங்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த சுமார் 300 பேர், கடந்த 27 ஆம் தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்துள்ளனர். புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 1 நாள் முழுக்க அங்கு தவித்துள்ளனர். அங்கிருந்து பிறகு கொழும்பு விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பேர் அங்கு தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசுகையில், "எங்களிடம் இந்திய ரூபாயும், குவைத் பணமும் தான் இருந்தது. மத்தளை விமான நிலையத்தில் அதை வைத்து சாப்பாடு கூட வாங்க முடியவில்லை. அங்கு ஒரு நாள் தவித்தோம். இப்போது கொழும்பு வந்தபிறகும் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்கள். உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம்.
இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27ஆம் தேதி டிட்வா புயலாக மாறியது. டிட்வா புயலால் இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications