Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லிக்கு பாடம் எடுக்கும் சீனா! "காற்று மாசை இப்படிதான் குறைக்கணும்!" சீக்ரெட் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: தலைநகர் டெல்லி காற்று மாசு காரணமாகத் திண்டாடி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே காற்று மாசைக் கட்டுப்படுத்தி, தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் காற்றின் தரத்தை மீட்டெடுத்தாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நமது தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை மேம்படுத்த டெல்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளும் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

China air polltuion

டெல்லி காற்று மாசு

இதற்கிடையே டெல்லி காற்று மாசு தொடர்பாகச் சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தைப் பல காலமாக நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு காற்று மாசு மிக மோசமாக இருந்த நிலையில், அதைத் தொடர்ச்சியான முயற்சிகளால் எப்படிக் குறைத்தனர் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங், தனது ட்விட்டரில் பெய்ஜிங் மற்றும் டெல்லியின் காற்றுத் தர நிலைகளைக் காட்டும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் காற்றின் தரம் 68, அதாவது "திருப்திகரமானது" என்ற பிரிவில் இருக்கிறது. மறுபுறம் டெல்லியில் காற்றின் தரம் 447, அதாவது கடுமையானது என்று இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காற்றின் தரம்

கடந்த 10 ஆண்டுகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளைச் சீனா எடுத்ததாகவும் இதன் காரணமாகவே காற்றின் தரம் மேம்பட்டு இருப்பதாகவும் யு ஜிங் தெரிவித்தார். மேலும், காற்று மாசைச் சீனா எப்படி படிப்படியாகக் குறைத்தது என்பதையும் வரும் நாட்களில் விளக்கவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவும் காற்று மாசு காரணமாகத் திணறி வந்தது. பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் பல முக்கிய நகரங்களில் பல ஆண்டுகளாகக் காற்று மாசு மிக மோசமாக இருந்தது. அங்கும் குளிர் காலங்களில் அடர்ந்த புகைமூட்டம், கண் பார்வையை மறைக்கும் காற்று இருக்கும். மேலும், குளிர் காலங்களில் அங்கு மக்களுக்குக் கடுமையான உடல்நிலை பாதிப்புகளும் வழக்கான ஒன்றாகவே இருந்தது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் அங்கு நிலைமை வெகுவாக மேம்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

தொடக்கப்புள்ளி

இதற்கான தொடக்கப்புள்ளி 2013ல் அமைந்தது. அப்போது தான் சீனா 'காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆக்ஷன் பிளான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகே அங்குக் காற்று மாசு கடுமையாகக் குறைந்தது. குறிப்பாக உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் PM2.5 அளவுகள் அங்கு 50 முதல் 60% வரை குறைந்துள்ளன என ஐநா அறிக்கையே கூறுகிறது.

சீனா நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்ததே காற்று மாசைக் குறைப்பதில் மிக முக்கியமான நடவடிக்கையாக இருந்தது. கடந்த 2012ல் 21.8 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி பயன்பாடு, சில ஆண்டுகளிலேயே ஒரு மில்லியன் டன்னாக குறைக்கப்பட்டது. குறிப்பாக பெய்ஜிங் நகரில் நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள் மொத்தமாக மூடப்பட்டன.

வாகனங்கள்

அடுத்து பெரிய பிரச்சினையாக அங்கு வாகன மாசு இருந்தது. வாகன மாசைக் கட்டுப்படுத்த கார்பன் எமிஷன் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய, அதிக மாசுபடுத்தும் வாகனங்களைச் சாலைகளில் இருந்து அகற்றப்பட்டன. தொழிற்சாலைகளிலும் மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டன.

பெய்ஜிங் மட்டுமின்றி அண்டை பிராந்தியங்களான தியான்ஜின், ஹெபே உள்ளிட்ட நகரங்களிலும் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே அங்குக் காற்று மாசு மெல்லக் குறைய ஆரம்பித்தது. கடந்தாண்டு அங்குச் சுமார் 290 நாட்கள் காற்றின் தரம் சிறப்பாக இருந்தது. அந்தளவுக்கு நிலைமை சீராகிவிட்டது. மேலும், இப்போது குளிர் காலத்தில் ஏற்படும் புகை இல்லாமல் போய்விட்டதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+