For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திசையெங்கும் நிர்வாண சாமியார்கள்.. காத்மண்டுவில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா!

நேபாளத்தின் காத்மண்டுவில் நிர்வாண சாமியார்கள் பங்கேற்புடன் மகா சிவராத்திரி விழா களைகட்டியது.

By Mathi
Google Oneindia Tamil News

காத்மண்டு: நேபாள தலைநகர் காத்மண்டுவில் இந்தியாவில் இருந்து போன நிர்வாண சாமியார்கள் சங்கமத்துடன் காத்மண்டுவில் மகா சிவராத்திரி களைகட்டியுள்ளது.

இந்துக்களின் மிக முக்கிய விழாக்களில் ஒன்று மகா சிவராத்திரி. இந்த நாளில் விடிய விடிய சிவாலயங்களில் தங்கி இருந்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

நிர்வாண சாமியார்கள்

நிர்வாண சாமியார்கள்

வட இந்தியாவில் நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள் முக்கிய புனித தலங்களில் நீராடுவர். குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் கோவிலில் நிர்வாண சாமியார்களின் சிறப்பு ஊர்வலம் நடத்தப்படும்.

காத்மண்டுவில்

காத்மண்டுவில்

இதேபோல் சிவராத்திரியை முன்னிட்டு நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாதர் ஆலயமும் களைகட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் காத்மண்டுவில் முகாமிட்டுள்ளனர்.

பசுபதிநாதர் கோவில்

பசுபதிநாதர் கோவில்

இந்த நிர்வாண சாமியார்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பசுபதிநாதர் கோவில் நிர்வாகமே செய்து கொடுத்துள்ளது. வழக்கம்போல நிர்வாண சாமியார்களின் கூட்டத்துக்கு மத்தியில் சிவராத்திரி காத்மண்டுவில் களைகட்டியுள்ளது.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதலே பசுபதிநாதர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர். அப்படியே நிர்வாண சாமியார்களிடம் ஆசியையும் பெற்று சென்றனர்.

படங்கள்: ஃபேஸ்புக்

English summary
Thousands of Devotees today celebrated Mahashivaratri at Pashupatinath temple, Nepal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X