இப்படியொரு தீவா? விண்கல் தாக்குதல், அணு அட்டாக்கிலிருந்து தப்பிக்க இங்கே போங்க! அப்படி என்ன இருக்கு?
அணுசக்தி பேரழிவு ஏற்பட்டால் சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் உணவு உற்பத்தி 97 சதவிகிதம் வரை வீழ்ச்சியடையும்.
கேன்பெரா: அணுசக்தி பேரழிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்கல் தாக்குதல் போன்றவற்றிலிருந்து மனிதர்களை பாதுகாக்கும் இடமாக ஆஸ்திரேலியா தீவு இருக்கிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் குறித்த அச்சம் நீண்டு வருகிறது. சீனா-அமெரிக்கா, அமெரிக்கா-ரஷ்யா, ஜப்பான்-வடகொரியா, இந்தியா-பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தொடர்ந்து இந்த பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் இருக்கிறது. அப்படி போர் ஏற்பட்டால் நிச்சயம் அணு ஆயுத தாக்குதல் நடைபெறும். இந்த அணு ஆயுதங்கள் மனித குலத்தை மட்டுமல்லாது சுற்றி இருக்கும் மொத்த உயிரினங்களையும் அழித்துவிடும்.
அணு ஆயுதங்கள் மட்டுமல்லாது எரிமலை வெடிப்புகளும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தியாவிலும், சீனா மற்றும் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் எரிமலைகள் இல்லையென்றாலும் கூட, மற்ற பகுதியில் ஏற்படும் வெடிப்புகள் இந்நாடுகளையும் பாதிக்கும். இதிலிருந்து கூட எப்படியாவது தப்பித்துக்கொள்ளலாம் என வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், விண்கற்கள் தாக்குதலிலிருந்து தப்பிப்பது முடியாத காரியம். 96 கி.மீ நீளம் கொண்ட எந்த பொருளும் பூமியை தாக்கினால் பூமி முழுவதுமாக அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மீண்டும் உயிர்ப்பிப்பு
இப்படியான தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் மனித குலத்தை உயிர்ப்பிப்பது, செழித்து வளர வைப்பது என்பது சவாலான பணி. இந்த சவாலான பணியை மேற்கொள்ள ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஒரு சில தீவுகள் மட்டுமே பொருத்தமான இடம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 'ரிஸ்க் அனாலிசிஸ்' இதழில் விஞ்ஞானிகள் இந்த தீவுகளை பட்டியலிட்டுள்ளனர். அதன்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகளும், சாலமன் தீவுகள் மற்றும் வனுவாட்டு தீவு ஆகியவை மனித குலத்தை மீண்டும் வளர வைக்க ஏற்ற இடமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். மேற்குறிப்பிட்ட பாதிப்புகளிலிருந்தும் நாம் தப்பித்துக்கொள்ள இந்த தீவுகள் உதவும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தீவுகள்
அணு கதிர் வீச்சு, எரிமலை வெடிப்பால் ஏற்படும் விஷ வாயு, விண்கல் மோதலால் ஏற்பட்டுள்ள இயற்கை பாதிப்புகளிலிருந்து இந்த தீவுகள் மனிதர்களை காக்கும். இதை விஞ்ஞானிகள் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. மாறாக இதே போல உள்ள 38 தீவுகளை ஆராய்ந்து பார்த்து மனிதன் உயிர் பிழைத்து மீண்டும் வளர்வதற்கான 13 காரணிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த தீவுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாதான் முதல் இடத்தில் இருக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் இங்கு விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

ஆஸ்திரேலியா
இங்கிருந்து பல மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவுகளை தயாரிக்க முடியும். அதனை பாதிப்படைந்த பகுதிகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்ய முடியும். அதற்கான உட்கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கிறது என கூறியுள்ள விஞ்ஞானிகள் இதில் உள்ள மைனஸ் பாயிண்ட்டையும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். ஆஸ்திரேலியா தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. இதனால் இந்த இரண்டு நாடுகளின் எதிரி நாடுகள் ஆஸ்திரேலியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்பதுதான் இந்த மைனஸ் பாயிண்ட். எனவே ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து பாதுகாப்பானது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நியூசிலாந்து
ஏனெனில் நியூசிலாந்தில் அணு ஆயுதங்கள் கிடையாது. மட்டுமல்லாது அரசியல் நிலைப்பாட்டிலும் இந்நாடு தனித்துவமானது என்பதால் இதன் மீது அண்டை நாடுகள் தாக்குதல் தொடுக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆகவே இது பாதுகாப்பான நாடாக இருக்கம். நியூசிலாந்தை தவிர்த்து மீதமுள்ள உள்ள தீவுகளில் உணவை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும் கூட அங்கிருந்து உணவை மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான போதுமான அளவு உட்கட்டமைப்பு வசதி இத்தீவுகளில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அணுசக்தி பேரழிவு ஏற்பட்டால் சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் உணவு உற்பத்தி 97 சதவிகிதம் வரை வீழ்ச்சியடையும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதில் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications