பண்ணை வீட்டில் மிதந்த 100 முதலைகள்.. யார் பெற்ற மகனோ.. விவசாயி செய்ததை கண்டு மலைத்த மக்கள்.. சபாஷ்
பாங்காக்: இணையத்தில் விவசாயி ஒருவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.. காரணம், இவர் நூற்றுக்கணக்கான முதலைகளை கொன்றுவிட்டாராம்.. இவர் ஏன் முதலைகளை கொன்றார் என்பதுதான் இதில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியை சேர்ந்தவர் நத்தபாக் குன்காட்.. இவருக்கு 37 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி ஆவார்.. கடந்த 17 வருடங்களாகவே, நூற்றுக்கும் மேற்பட்ட சியாமி முதலைகளை வளர்த்து வருகிறார்...

இதற்காக தன்னுடைய பண்ணையில், சுற்றுச்சுவர்களை எழுப்பி, முதலைகளுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து, முறையான உணவுகளையும் வழங்கி பராமரித்து வருகிறார்.. இறைச்சிக்காக இந்த முதலைகளை நத்தபாக் வளர்த்து வருவதாக தெரிகிறது.
கனமழை: இந்நிலையில், தாய்லாந்தில் புயல் காரணமாக சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதிலும், வடக்குப்பகுதி திடீரென வெள்ளத்திலேயே மூழ்கிவிட்டது.. இதனால், நத்தபாக்கின் முதலை பண்ணையும் வெள்ளநீரில் பாதிக்கப்பட்டது. அப்போதுதான், இந்த பண்ணையிலுள்ள சுற்றுச்சுவரை, அந்த பகுதி மக்கள் கவனித்தனர்..
ஒருவேளை, வெள்ள அபாயத்தில், இந்த பண்ணையிலுள்ள சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தால், முதலைகள் எல்லாம் பண்ணையிலிருந்து வெளியேறிவிடுமே? அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்களுக்குள் முதலைகள் புகுந்துவிடுமே? இதனால், மனிதர்களை கொன்று குவித்துவிடுமே? என்றெல்லாம் அப்பகுதி மக்கள் நடுநடுங்கி போனார்கள்.. இதனால், பண்ணையிலுள்ள சுற்றுச்சுவர் குறித்தும், முதலைகள் குறித்தும் தங்கள் பயத்தை, புகார்களாக வனத்துறைக்கு கொண்டு சென்றனர்.

வனத்துறை அதிகாரிகளும், உடனடியாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்தனர்.. பிறகு, உடனடியாக பண்ணையில் இருந்த முதலைகளை, வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள்..
பண்ணை: ஆனால், பண்ணையிலிருந்து குட்டி முதலைகளை மட்டும் அங்கிருந்து எடுக்க முடிந்ததே தவிர, நூற்றுக்கணக்கான பெரிய முதலைகளை அப்புறப்படுத்த முடியவில்லை.. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் அதிகாரிகள் விழித்தனர்.. ஆனால், முதலையால், எந்த ஒரு நபரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தனர்..

இறுதியில், மக்களுக்கு தீங்கு ஏற்படக் கூடாது என்பதற்காக, ஆசை ஆசையாக தான் வளர்த்த முதலைகளை கொல்ல முடிவு செய்தார் பண்ணை ஓனர் நத்தம்பாக். இதையடுத்து, மர அறுவை மிஷன் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட முதலைகளை அறுத்து கொன்று குவித்தார். மேலும், வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, பண்ணையில் 125 முதலைகளின் மீதும் கரண்ட் ஷாக் தரப்பட்டது.. மின்சாரம் பாய்ச்சியதில், 125 முதலைகளும் கருகின..
பாராட்டு: ஆனால், அந்த பண்ணையில் 500 குட்டி முதலைகள் இருந்ததால், அவைகளை மட்டும் பாதுகாப்பான இடங்களுக்கு வனத்துறையினர் கொண்டு சென்றார்கள்.. மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, தனது 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணை வீட்டுக்காரர் நத்தபாக்கை பலரும் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications