For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிக்கா வைரஸால் நீங்கள் நினைப்பதை விட மூளை மோசமாக சேதமடையும்: எச்சரிக்கும் டாக்டர்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஜிக்கா வைரஸால் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் சேதம் நீங்கள் நினைப்பதை விட அதிகம் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் வில்லியம் டாபின்ஸ் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏடீஸ் கொசுக்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் கருவில் இருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு அவர்கள் சிறிய தலையுடன் பிறக்கிறார்கள்.

கொலம்பியாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை ஜிக்கா வைரஸ் தாக்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவின் பிரபல டாக்டர் வில்லியம் டாபின்ஸ் கூறுகையில்,

ஆய்வு

ஆய்வு

பிரேசிலில் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் தலையின் ஸ்கேனை பார்த்தேன். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது தான் மோசமான பாதிப்பாக உள்ளது.

தலை

தலை

ஜிக்கா வைரல் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் தலை சிறியதாக உள்ளது. அவர்களின் தலை வழக்கத்தை விட 5 முதல் 6 மடங்கு சிறியதாக உள்ளது. தலை இவ்வளவு சிறியதாக இருந்தால் மூளையை பற்றி சொல்லவே வேண்டாம்.

பிரேசில்

பிரேசில்

சிறிய தலையுடன் பிறந்த குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பிற குழந்தைகளை போன்று அறிவாக உள்ளனர். ஆனால் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவும் பிரேசிலில் சிறிய தலையுடன் பிறக்கும் குழந்தைகளில் ஒரு சதவீதம் பேருக்கு கூட நல்ல ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளை போன்று அறிவாற்றல் இல்லை.

மூளை

மூளை

கருவில் குழந்தையின் மூளை வளரும்போது வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அது சுருங்கிவிடும். ஜிக்கா வைரஸ் தாக்குதல் உள்ள தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளின் மூளையில் கால்சியம் சேர்ந்துள்ளது. கால்சியம் எலும்புகளுக்கு செல்ல வேண்டும். அப்படி இருக்கையில் அது மூளையில் படிந்தால் அதனை வேலை செய்யவிடாமல் தடுக்கும்.

ஜிக்கா

ஜிக்கா

ஜிக்கா வைரஸ் தற்போது 39 நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்காவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு திரும்பி வந்தவர்களில் 52 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

English summary
Famous US doctor William Dobyns said that Zika virus is causing more brain damage than what we are told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X