For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இது ரொம்ப தப்புங்க.. இனிமேல் இப்படி செய்யாதீங்க!" ரஷ்யா அனுப்பிய பரபர மெசேஜ்! ஏன் தெரியுமா

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போர் 2 மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக ரஷ்யா நேரடியாக அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

உக்ரைன் போர் கடந்த பிப். இறுதி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மாதங்களுக்கு மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உக்ரைன் போர் காரணமாகப் பல லட்சம் உக்ரைன் மக்கள் தங்கள் சொந்த வீட்டையும் வாழும் பகுதிகளையும் விட்டும் வெளியேறி உள்ளனர்.

விடாது துரத்தும் ரஷ்யா! விட்டுக் கொடுக்காத உக்ரைன்! நேரடியாக களத்தில் இறங்குமா அமெரிக்கா? விடாது துரத்தும் ரஷ்யா! விட்டுக் கொடுக்காத உக்ரைன்! நேரடியாக களத்தில் இறங்குமா அமெரிக்கா?

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

இந்த போர் ஆரம்பித்த உடனேயே அமைதிப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இருப்பினும், முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போர் தொடர்ந்தே வந்தது. அதேநேரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பல விகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் போர் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

உக்ரைன் ராணுவம் ரஷ்யா பகுதியில் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, உக்ரைன் நாட்டின் குறிப்பிடப் பகுதிகளைக் குறி வைத்து ரஷ்யா மீண்டும் தாக்குதலில் இறங்கி உள்ளது. ரஷ்யாவைச் சமாளிக்க தங்களுக்கு ஆயுதங்கள் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். அவரது கோரிக்கையை ஏற்று அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது.

 வலியுறுத்தும் ரஷ்யா

வலியுறுத்தும் ரஷ்யா

இந்த மாதம் மட்டுமே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டிற்கு உதவ தலா 800 பில்லியன் மதிப்பிலான இரு ராணுவ உதவிகளை அறிவித்து இருந்தார்.இது தொடர்பாக அமெரிக்காவை நேரடியாக வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டிற்கு இனி எந்த ஆயுதங்களையும் அனுப்பக் கூடாது என்று அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் அனடோலி அன்டோனோவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்து நோட்டீஸையும் அமெரிக்கா ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளது.

 ரஷ்ய தூதர்

ரஷ்ய தூதர்

இது குறித்து ரஷ்யத் தூதர் அனடோலி அன்டோனோவ் கூறுகையில், "உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்க அதிகளவில் ஆயுதங்களை வழங்கி வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்கா இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்" என்றார். ரஷ்யா ராணுவத்தை எதிர்க்க மேற்குல நாடுகள் அளிக்கும் நவீன ஆயுதங்கள் ரஷ்யாவுக்கு பெரியளவில் பயன் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Ukraine உடனான மோதல் 3ஆம் உலக போர் தொடங்கலாம்.. எச்சரிக்கும் Russia
     அமெரிக்கா பரபர

    அமெரிக்கா பரபர

    மறுபுறம் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு கடந்த சில வாரங்களாகவே உலக தலைவர்கள் தொடர்ந்து விசிட் அடித்து வருகின்றனர். முதலில் பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் அங்குச் சென்று திரும்பிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கீவ் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். சரியான ஆயுதங்கள் இருந்தால் நிச்சயம் போரில் வெல்ல முடியும் என்றும் அவர் அமெரிக்கத் தலைவர்கள் கூறி இருந்தனர்.

    English summary
    Russia says it should not send any more arms to Ukraine: (உக்ரைன் நாட்டிற்கு எவ்வித உதவிகளையும் செய்யக் கூடாது என்று எச்சரித்த ரஷ்யா) Ukraine war latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X