For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்மார்ட் போனில் செல்பி எடுத்தது அந்தக் காலம்.. டிரோன் விட்டு சுட்டுத் தள்ளுவது இந்தக் காலம்..!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பிலிம் போட்டு படம் எடுப்பது, பிலிமே இல்லாமல் டிஜிட்டலில் எடுப்பது, செல்போன் கேமராவில் எடுப்பது, செல்பி எடுப்பது, குரூப்பி எடுப்பது.. ஸ்டிக் வைத்து பெரிய கும்பலையே படமாக எடுப்பது... இதெல்லாம் போயே போச் பாஸ்.. புகைப்படக் கலை வேறு வேறு அவதாரங்களுக்குத் தாவத் தொடங்கி விட்டது.

டிரோன் வைத்துப் புகைப்படம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்கும் போட்டி வேறு வந்து விட்டது. பரிசுகள் எல்லாம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

புகைப்படக் கலையின் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கப் போகிறதோ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இன்று அதி வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் தழுவிய அளவில் டிரோன் மூலம் புகைப்படம் எடுக்கும் போட்டி ஒன்று கடந்த ஆண்டு அறிமுகமானது. இப்போது 2வது ஆண்டாக போட்டி வைத்து முடிவுகளையும் அறிவித்துள்ளனர்.

5000 பேர்

5000 பேர்

எத்தனை பேர் இதற்கு வந்து விடுவார்கள் என்று கேட்கலாம். மூச்சை தம் பிடித்துக் கொள்ளுங்கள்.. உலகம் முழுவதுமிருந்து 5000க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்களது டிரோன் படங்களை அனுப்பிக் குவித்து விட்டனர்.

சாதா முதல் ஜாம்பவான் வரை

சாதா முதல் ஜாம்பவான் வரை

சாதாரண புகைப்படக் கலைஞர்கள் முதல் ஜாம்பவான் புகைப்பட நிபுணர்கள் வரை விதம் விதமாக புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தனர் இந்தப் போட்டிக்கு.

பரிசீலிக்க பெரிய குரூப்

பரிசீலிக்க பெரிய குரூப்

இந்தப் புகைப்படங்களைப் பரிசீலித்து பரிசுக்குரியவற்றைத் தேர்வு செய்ய நேஷனல் ஜியாகிராபி புகைப்படக் கலைஞரும், புலிட்சர் விருது பெற்றவருமான கென் கீகர், நேஷனல் ஜியாகிரபி பிரான்ஸின் தலைவரான பியர்ரி விரிக்னாட் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இதுக்குப் பெரு டிரோன்ஸ்டோகிராம்

இதுக்குப் பெரு டிரோன்ஸ்டோகிராம்

இன்ஸ்டகிராம் போல இதற்கு டிரோன்ஸ்டோகிராம் என்று பெயர் வைத்துள்ளனர். பெயர்க் காரணத்தை விளக்கத் தேவையில்லை.

அடேங்கப்பா ஸ்பான்சர்கள்

அடேங்கப்பா ஸ்பான்சர்கள்

இந்தப் புகைப்படப் போட்டிக்கு ஏகப்பட்ட ஸ்பான்சர்கள் வேறு. நேஷனல் ஜியாகிரபிக், கோடாக், பேரட், கோ புரோ, ஹெக்ஸோ பிளஸ், பிக்கனோவா, ஹாபிகோ, அடோப் என பலரும் குவிந்து விட்டனர் பரிசுகளை அள்ளித் தர.

இடங்களுக்கான முதல் பரிசு

இடங்களுக்கான முதல் பரிசு

இடங்களுக்கான வரிசையில் முதல் பரிசை ரிக்கார்டோ மாட்டியல்லோ என்பவர் தட்டிச் சென்றார். பனி மூட்டத்துக்கு மத்தியில் தெரிந்த பிரேசிலின் மரிங்கா நகரின் அழகை இவர் அழகோவியமாக தனது டிரோன் கேமரா மூலம் எடுத்துள்ளார்.

இயற்கைக் காட்சியில் முதல் பரிசு

இயற்கைக் காட்சியில் முதல் பரிசு

இயற்கைக் காட்சிகளுக்கான முதல் பரிசை சுறா மீன்களுக்கு மத்தியில் இருவர் நீச்சல் அடிப்பதை படம் பிடித்த தஹிதி பிளைஷூட் எடுத்த படம் பெற்றது. பிரெஞ்சு பாலினேசியாவில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இடங்களுக்கான 2வது இடம்

இடங்களுக்கான 2வது இடம்

இடங்களுக்கான 2வது பரிசை வனாய் பிலிம்ஸ் எடுத்த படம் பெற்றுள்ளது. பிரான்சில் உள்ள மான்ட் செயின்ட் மைக்கேல் என்ற இடத்தை படு அழகாக இவர்கள் எடுத்துள்ளனர்.

இயற்கைக்கான 2வது இடம்

இயற்கைக்கான 2வது இடம்

இயற்கைக் காட்சிகளுக்கான 2வது பரிசை கெடில்லார்ட் எடுத்த படம் பெற்றது. பலர் கூடி நீச்சலில் ஈடுபட்டுள்ள காட்சி இதில் படு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் லா ஜோல்லோவில் நடந்த கடல் நீச்சல் போட்டி இது.

இடங்களுக்கான 3வது பரிசு

இடங்களுக்கான 3வது பரிசு

இடங்களுக்கான 3வது பரிசை ஆண்டர்ஸ் என்பவர் எடுத்த தூலிப் மலர்த் தோட்டம் பெற்றுள்ளது. நெதர்லாந்தில் உள்ள இந்தத் தோட்டம் என்ன அழகு என்று வியப்பதைத் தவிர வேறு வழியில்லை இந்தப் படத்தைப் பார்க்கும்போது.

இயற்கைக்கான 3வது பரிசு

இயற்கைக்கான 3வது பரிசு

இயற்கைக் காட்சிப் பிரிவில் 3வது பரிசை பிரெஞ்சு பாலினேசியாவில் எடுக்கப்பட்ட படம் பெற்றுள்ளது.

பாப்புலர் பிரிவில் முதல் பரிசு

பாப்புலர் பிரிவில் முதல் பரிசு

பாப்புலர் பிரிவில் முதல் பரிசை சைப்ரஸின் லிமோஸால் கார்னிவலில் எடுக்கப்பட்ட படம் பெற்றுள்ளது.

2வது பரிசு

2வது பரிசு

2வது பரிசை பல்கேரியாவின் புளோவித்வ் நகரில் எடுக்கப்பட்ட இரவ நேரக் காட்சிப் படம் பெறுகிறது.

3வது பரிசு மெக்ஸிகோவுக்கு

3வது பரிசு மெக்ஸிகோவுக்கு

3வது பரிசை மெக்ஸிகோவின் மஸால்தான் நகரில் எடுக்கப்பட்ட படம் பெற்றுள்ளது.

இதிலும் செல்பி உண்டு பாஸ்

இதிலும் செல்பி உண்டு பாஸ்

இந்த டிரோன் புகைப்படங்களில் பல செல்பி புகைப்படங்களும் உண்டு என்பது விசேஷமானது. வரும் காலங்களில் இந்த டிரோன் புகைப்படப் போட்டிக்கு மேலும் பல ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The much anticipated Drone photo contest results are out and the photographs take by drone cameras are simply superb.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X