For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எபோலாவின் தாக்கம் கையை மீறிப் போய்விட்டது, கட்டுப்படுத்த ரூ. 3,628 கோடி தேவை: ஐ.நா.

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றுள்ளதாக ஐ.நா. சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் ஆட்கொல்லியான எபோலா வைரஸ் பரவி வருகிறது. நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சோதனை அடிப்படையில் அளிக்கப்பட்ட இசட்மாப் மருந்தும் மேற்கு ஆப்பிரிக்கர்களுக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்கரெட் சான் கூறுகையில்,

எபோலா வரலாற்றில்

எபோலா வரலாற்றில்

எபோலாவின் சுமார் 40 ஆண்டு கால வரலாற்றிலேயே தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் மிகவும் அதிகம்.

கையை மீறி

கையை மீறி

மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா மிக வேகமாக பரவி வருகிறது. அது தடுப்பு நடவடிக்கைகளை மீறி பரவுகிறது. எபோலா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவுகிறது.

மரணம்

மரணம்

எபோலா காய்ச்சலுக்கு இதுவரை 1,900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 500 பேர் எபோலா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்றார் சான்.

குழந்தைகள்

குழந்தைகள்

எபோலா வைரஸின் மறைமுக விளைவாக குழந்தைகளுக்கு ஏற்படும் தடுக்கக்கூடிய நோய்கள் கூட தடுக்கப்பட முடியாமல் அவர்கள் பலியாகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

கட்டுப்படுத்த

கட்டுப்படுத்த

எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ரூ. 3 ஆயிரத்து 628 கோடி தேவைப்பபடுகிறது என்று ஐ.நா. மூத்த அதிகாரி டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார்.

English summary
The Ebola virus outbreak in West Africa is racing ahead of efforts to control it and at least $600 million is needed to get the unprecedented epidemic under control, UN health officials said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X