For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவின் குண்டு மழை.. பாதுகாப்பாக இருங்கள்.. உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் ஹை அலர்ட்!

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது அடுத்தடுத்து ஏவுகணை மழையை ரஷ்யா பொழிந்துள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரில் ரஷ்யா பின்வாங்கிய நிலையில் இன்று அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது.

இதனையடுத்து இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

குழப்பமான நேரத்திலும் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவ் வெளியிட்ட போஸ்ட்.. எதற்காக இப்படி எல்லாம்? குழப்பமான நேரத்திலும் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவ் வெளியிட்ட போஸ்ட்.. எதற்காக இப்படி எல்லாம்?

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன்

ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. ஒரு காலத்தில் உலகின் சக்தி வாய்ந்த நாடாக இருந்தது சோவியத் யூனியன். அமெரிக்கா, பிரிட்டன் எல்லாம் இந்நாட்டுக்கு அப்புறம்தான். இப்படி இருக்கும்போது 1991ம் ஆண்டு சோவியத் உடைந்தது. அதனுடன் ஒன்றியிருந்த நாடுகளெல்லாம் சுதந்திர நாடுகளாக உரிமை கோரி சென்றுவிட்டன. இப்படி போன நாடுதான் உக்ரைன். பாக்க சிறுசா இருந்தாலும், அது செல்வ செழிப்புமிக்க நாடு.

வாக்கு

வாக்கு

உலகிலேயே பெரியதாக இருக்கும் ரஷ்யாவின் உணவு தேவைகளை கணிசமான அளவு உக்ரைனில் விளையும் தனியங்கள்தான் பூர்த்தி செய்யும். இவ்வாறு இருக்கையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் சேர வேண்டும் என அமெரிக்கா தூண்டிவிட்டது. இதற்கு உக்ரைனும் சம்மதம் தெரிவிக்கையில், ரஷ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரில் குதித்தது. ஏனெனில் அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த சோவியத் யூனியன் உடையும் போது அமெரிக்கா ஒரு வாக்கு கொடுத்தது.

போர்

போர்

அதாவது மேற்கொண்டு இனி கிழக்கில் நேட்டோ விரிவடையாது என்பதுதான் அது. இப்படி இருக்கையில், அமெரிக்கா உசுப்பி விட, உக்ரைன் அதை நம்பி நேட்டோவில் சேர்வதாக ஒப்புக்கொள்ள சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அது போராக வெடித்தது. தொடர்ந்து 229வது நாளாக நடைபெற்று வரும் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதே நேரம் உக்ரைன் நிலப்பரப்பில் 15 சதவிகித நிலத்தை ரஷ்யா கைப்பற்றிக்கொண்டது.

பதிலடி

பதிலடி


ஆனால் உக்ரைனை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கைவிடவில்லை. இதுவரை அமெரிக்கா சுமார் ரூ.12.5 லட்சம் கோடி அளவுக்கு உதவிகளை உக்ரைனுக்கு செய்திருக்கிறது. அதாவது ரஷ்யா ஓராண்டுக்கு தனது ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும். எனவே உக்ரைன் பதில் தாக்குதல் நடத்த தற்போது போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது.

அறிவிப்பு

அறிவிப்பு

இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், உக்ரைன் அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் நிலை குறித்து தூதரகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

English summary
The Indian Embassy has issued an important notice to the Indians in the country as Russia has repeatedly rained missiles on the capital of Ukraine, Kiev. Russia has retreated from the war a few days ago and has launched an offensive today. Following this, the Indian Embassy has advised the Indian people to be safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X