For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடா ”புடின்” - உக்ரைனுக்கு ”வேட்பாளர்” அந்தஸ்து.. ரஷியாவுக்கு செக் வைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

Google Oneindia Tamil News

கீவ்: ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முடிவுசெய்திருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது!

ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனைவிட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர்.

உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து

உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து

உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. இருப்பினும் ரஷியாவும் தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் தாக்குதலை தொடர்கிறது. இதனிடையே ரஷியாவுக்கு செக் வைக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

27 நாடுகள் ஆதரவு

27 நாடுகள் ஆதரவு

பெல்ஜியம் தலைநகர் பிரெசல்ஸில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள 27 நாடுகள் ரஷியாவின் தாக்குதலுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஆதரவளித்துள்ளார்கள்.

 உக்ரைன் அதிபர் பேச்ச்ய்

உக்ரைன் அதிபர் பேச்ச்ய்

உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் 11 பேரிடம் இதுகுறித்து புதன்கிழமை பேசினார். அதில், உக்ரைனுக்கு இந்த கடினமான நேரத்தில் வேட்பாளர் அந்தஸ்து வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். பிரெசல்ஸில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என செலென்ஸ்கி கூறி இருக்கிறார்.

Recommended Video

    Agnipath திட்டத்தால் Ban ஆன 35 WhatsApp Groups! Dogecoin-க்கு Elon ஆதரவு! | *BitsandBytes
    என்ன லாபம்?

    என்ன லாபம்?

    அதே நேரம் இந்த வேட்பாளர் அந்தஸ்து என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துவிடாது. மேலும் பாதுகாப்பு உத்தரவாதங்களையும் இதன் மூலமாக உக்ரைனால் பெற முடியாது. அதே நேரம் இந்த அந்தஸ்து கொண்ட நாட்டிற்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியும். இந்த அந்தஸ்து வழங்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற்றப்படாவிட்டால் வேட்பாளர் அந்தஸ்தை திரும்பப்பெறவும் சட்டம் வகை செய்வது குறிப்பிடத்தக்கது.

    English summary
    European Union leaders supports to give Candidature status to Ukraine: ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முடிவுசெய்திருக்கின்றனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X