For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.. 2 பேர் பலி

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர்.

இந்தோனேஷியா கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள பேருந்து நிலையம் அருகே இன்று குண்டுவெடிப்பு நிகழ்துள்ளது. 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர்.

Explosions in Indonesia's east Jakarta near bus station

இந்த குண்டுவெடிப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யார் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரியவில்லை. இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், எந்த அமைப்பும் இதற்குப் பொறுப்பேற்கவில்ல.

செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தோனேஷியாவிலும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
At least one man was killed after an explosion was heard on Wednesday in Indonesia's east Jakarta near bus station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X