கணினிகளை மூளையால் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் - ஃபேஸ்புக் உருவாக்குகிறது

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

கணினிகளை நேரடியாக நமது மூளையின் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க முயன்றுவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களை ஒரு நிமிடத்துக்கு 100 வார்த்தைகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் ''அமைதியான பேச்சு'' என்ற மென்பொருளை உருவாக்கி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆரம்ப நிலையில் உள்ள இந்தத் திட்டத்துக்கு, எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல், மூளை அலைகள் எனப்படும் மூளையில் உள்ள மின் தூண்டுதல்களை கண்டறிய புதிய தொழில்நுட்பம் தேவைப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரெஜினா டூகன், '' இது மக்களின் மூளையில் தோன்றும்

சீரற்ற எண்ணங்களை கண்டுபிடிப்பது தொடர்பானது அல்ல'', என்று தெளிவுபடுத்தினார்.

ஆக்குலஸ் மெய்நிகர் கருவிகள் இந்த மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
Reuters
ஆக்குலஸ் மெய்நிகர் கருவிகள் இந்த மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அவர் மேலும் கூறுகையில், ''உங்களுடைய மூளையில் தோன்றும் ஏரளாமான எண்ணங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள நீங்கள் முடிவு செய்யலாம்'' என்று கூறினார்.

''அந்த வார்த்தைகளின் பொருள் குறித்து அறிவது பற்றி நாங்கள் பேசவில்லை.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் 8 ஆம் கட்டடம் எனப்படும் ஃபேஸ்புக்கின் வன்பொருள் ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவராக இருப்பவர் டூகன். இலக்கை அடையும் விதமாக வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டையும் உருவாக்கும் நோக்கில் 60க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களை இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

''நம் மூளைகள் ஒவ்வொரு விநாடிக்கும் சுமார் நான்கு உயர் வரையறைக் காட்சி அமைப்பு கொண்ட திரைப்படங்களை இணையத்தில் ஒளிபரப்பும் அளவிற்கு போதிய தரவுகளை உருவாக்குகின்றன'', என்று மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார்.

''தற்போது ஒரு கைப்பேசி மூலம் நீங்கள் தட்டச்சு செய்வதைவிட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் மூளையிலிருந்து நீங்கள் வைத்திருக்கும் கணினியில் தட்டச்சு செய்யும் அமைப்பு முறையை உருவாக்க நாங்கள் முயன்று வருகின்றோம், என்றார் அவர்.

மார்க் சக்கர்பெர்க்
Getty Images
மார்க் சக்கர்பெர்க்
நம் மூளைகள் ஒவ்வொரு விநாடிக்கும் சுமார் நான்கு உயர் வரையறைக் காட்சி அமைப்பு கொண்ட திரைப்படங்களை இணையத்தில் ஒளிபரப்பும் அளவிற்கு போதிய தரவுகளை உருவாக்குகின்றன : மார்க் சக்கர்பெர்க்

''இறுதியாக, இதை, உடலில் அணிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை போன்று நாங்கள் மாற்ற விரும்புகிறோம். அப்போதுதான் போதுமான அளவில் அதை உற்பத்தி செய்ய முடியும், என்றார் சக்கர்பர்க்.

மக்கள் தோல் மூலம் சப்தங்களை கேட்க அனுமதிக்கும் தொழில்நுட்பம் சான் ஜோஸில் நடைபெற்ற நிறுவனத்தின் மேம்பாட்டாளர் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பிற தொழில்நுட்பங்களில் ஒன்று.

பிரெய்ல் முறை போன்றதான இந்த தொழில்நுட்பம், தோலில் உள்ள அழுத்தப்புள்ளிகள் மூலம் தகவல்களை அனுப்புகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தற்போதுள்ள சாத்தியமான தொழில்நுட்பங்களை காட்டிலும் பலமடங்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் முன்னேறியுள்ள ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றி திட்டமிடுகிறது.
Reuters
ஃபேஸ்புக் நிறுவனம் தற்போதுள்ள சாத்தியமான தொழில்நுட்பங்களை காட்டிலும் பலமடங்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் முன்னேறியுள்ள ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றி திட்டமிடுகிறது.

''ஒருநாள், வெகுதூரம் அல்ல, எனக்குத் தெரியாத மாண்டரின் மொழியில் கூட யோசித்து, அதை அதே தருணத்தில் உங்களால் ஸ்பானிஷ் மொழியில் உணர முடியும்,'' என்கிறார் டூகன்.

இந்த அறிவிப்புகளால், ஃபேஸ்புக் நிறுவனம் தற்போதுள்ள சாத்தியமான தொழில்நுட்பங்களை காட்டிலும் பலமடங்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் முன்னேறியுள்ள ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றி திட்டமிடுகிறது.

BBC Tamil
English summary
Facebook says it is working on technology to allow us to control computers directly with our brains.
Please Wait while comments are loading...