வாவ்.. காசினியின் கடைசி "முத்தங்கள்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாசா: நாசாவின் காசினி விண்கலத்தின் கடைசிப் புகைப்படங்கள் நம்மை மெய் மறக்க வைக்கின்றன. இன்று தனது 13 ஆண்டு சனி கிரக ஆய்வுக்குப் பின்னர் கிரகத்திற்குள் போய் விட்டது காசினி.

அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் செல்லப் பிள்ளைதான் இந்த காசினி. கடந்த 1997ம் ஆண்டு பூமியிலிருந்து செலுத்தப்பட் காசினி விண்கலம் சனி கிரக ஆய்வுகளில் முக்கியத்துவம் பெற்றதாகும்.

சனி கிரகத்தின் பல்வேறு தன்மைகள், அதன் நிலவுகள், கடல்கள் உள்ளிட்டவை குறித்த பல அரிய தகவல்களையும், கண்கவர் புகைப்படங்களையும் அது நமக்கு அனுப்பி உதவியுள்ளது. இன்றுடன் காசினியின் வாழக்கை முடிந்தது. காசினி நமக்கு அனுப்பிய சில அரிய படங்களின் தொகுப்பு உங்களுக்காக:

கண்ணை விட்டு மறையும் என்செலாடஸ்

கண்ணை விட்டு மறையும் என்செலாடஸ்

சனி கிரகத்தின் நிலவுகளில் சிறியதான என்செலாடஸை இந்தப் படத்தில் பார்க்கலாம். பிரமாண்ட சனி கிரகத்திற்குப் பின்னே மறைந்தபடி காணப்படுகிறது இந்த குட்டி நிலவு. காசினி எடுத்த கடைசிப் படங்களில் இதுவும் ஒன்று.

அழகிய சனி

அழகிய சனி

சனி கிரகத்தையும், அதன் வளையத்தையும் படு அழகாக படம் எடுத்த காசினி. இதுவும் காசினியின் கடைசிப் புகைப்படங்களில் ஒன்றாகும். நல்ல தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட படம் இது.

சனியின் வளையங்கள்

சனியின் வளையங்கள்

ஜவுளிக்கடையில் சர்ட்டிங் சூட்டிங் அடுக்கி வைத்தது போல இருக்கிறது. இது சனி கிரகத்தின் அழகிய வளையங்களின் அடுக்கு. படு குளோசப்பாக எடுக்கப்பட படம்.

கொந்தளிக்கும் மேகங்கள்

கொந்தளிக்கும் மேகங்கள்

சனி கிரகத்தின் மேற்பரப்பில், அதன் வானில் கொந்தளிக்கும் மேகக் கூட்டம் இது.

ஒளிரும் டைட்டன்

ஒளிரும் டைட்டன்

சனி கிரகத்தின் மிகப் பெரிய நிலவான டைட்டன் ஒளிரும் அழகிய காட்சி.

உதய காலம்

உதய காலம்

சனி கிரகத்தில் ஒரு காலை நேரத்து உதயக் காட்சி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NASA's Cassini spacecraft took the final plunge today and here are some of the farewell portraits from the spacecraft.
Please Wait while comments are loading...