For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க கலவரம்: கொல்லப்பட்ட கருப்பர் இன வாலிபர் திருடுவது போன்ற வீடியோவை வெளியிட்ட போலீஸ்!

Google Oneindia Tamil News

பெர்குசன், அமெரிக்கா: அமெரிக்காவில் இனக் கலவரம் தீவிரமடைந்து வரும் நிலையில், கொல்லப்பட்ட கருப்பர் இன வாலிபர் மைக்கேல் பிரவுன் கடை ஒன்றில் திருடுவது போன்ற வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளதால் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சுட்டுக் கொன்ற அதிகாரியைக் காப்பாற்றும் வகையில் போலீஸார் நடந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் மைக்கேல் பிரவுனின் பெயரைக் கெடுக்கும் வகையில் பெர்குசன் நகர போலீஸார் நடந்துள்ளதாகவும் சர்ச்சைகள் வெடித்துள்ளன.

Ferguson Police Released Robbery Video Despite DOJ Concerns

முன்னதாக இந்த வீடியோ காட்சியை வெளியிட நீதித்துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் அதையும் மீறி பெர்குசன் காவல்துறை இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவத்திற்குப் பின்னர்தான் பிரவுனை, வில்சன் என்ற வெள்ளையர் போலீஸ் அதிகாரி சரமாரியாக சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை வெளியிட்டால் மேலும் பதட்டம் அதிகரிக்கும் என்று நீதித்துறை காவல்துறையை எச்சரித்திருந்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

English summary
The Ferguson Police Department released a video that allegedly shows Michael Brown robbing a convenience store. Critics lashed out at police, saying that the footage's release was an attempt to disparage Brown's character. CNN revealed on Saturday that the Department of Justice found out about the video earlier this week and asked police not to make it public. According to CNN, the DOJ was worried that the footage would spark more violence in Ferguson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X