For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீன் ஏஜில் உறவு கொள்வோர் எண்ணிக்கை மளமள சரிவு.. திருந்திவிட்டனரா, இயலவில்லையா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டீன் ஏஜில் செக்ஸ் வைத்துக்கொள்ளுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாக, அமெரிக்க ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் இதுகுறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த விவரம்: கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையை ஒப்பிடும்போது, தற்போது, டீன் ஏஜில் செக்ஸ் வைத்துக்கொள்வோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

ஆண், பெண் விகிதம்

ஆண், பெண் விகிதம்

பெண்களை பொறுத்தளவில் இந்த எண்ணிக்கை 14 சதவீதமாகவும், ஆண்களை பொறுத்தளவில் 22 சதவீதமாகவும், குறைந்துள்ளது. 2011-2013ம் ஆண்டுகளில், அமெரிக்காவில் 44 சதவீத டீன் ஏஜ் பெண்களும், 47 சதவீத டீன் ஏஜ் ஆண்களும், ஒருமுறையாவது செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பான உறவு

பாதுகாப்பான உறவு

அதில் 79 சதவீதம் பெண்கள் மற்றும் 84 சதவீதம் ஆண்கள், பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி உறவு கொண்டதாக சொல்லியுள்ளனர். பாதுகாப்பான வழிமுறைகளில் ஆணுறைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. உடலுறவு கொண்ட டீன் ஏன் பெண்களில் 60 சதவீதம் பேர், தாங்கள் உறவு கொள்ளும்போது, ஆண் உச்சத்தை அடையும் நேரத்தில், விலகிக்கொள்வதன் மூலம், கரு உருவாகாமல் தப்பும் வழியை கையாண்டதாக தெரிவித்துள்ளனர்.

கருத்தடை மாத்திரை

கருத்தடை மாத்திரை

54 சதவீதம் பேர், அத்தோடு, கருத்தடை மாத்திரைகளையும் பயன்படுத்தியுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. முதல்முறையாக உறவு கொள்ளும்போது, கருத்தடை முறைகளில் எதையும் பயன்படுத்தாத டீன் ஏஜ் பெண்களுக்கு மற்ற பெண்களைவிட தாயாகும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

காரணம்

காரணம்

தற்போதைய காலகட்டத்தில் டீன் ஏஜ் வயதில் செக்ஸ் ஆசை குறைந்துவிட்டதா, மருத்துவ ரீதியாக இளைஞர்கள் செயலிழந்து வருகிறார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், பாதுகாப்பான உடலுறவு முறைகளை அறிந்துகொண்டதன் விளைவாக, உறவு குறித்த தகவல் வெளியே மறைக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளதும், இந்த புள்ளி விவரத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

English summary
The report shows that in the early teenage years, male teens were more likely than female teens to report having had sex, but by age 17, the rates were similar. Most teenagers said they used contraceptives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X