அடடா.. இது ரொம்ப வித்தியாசமான டீலிங்கா இருக்கே.. அசரடித்த ஏர் ஹோஸ்டஸ்..!
ஜன்னல் சீட்தான் வேண்டும் என்று விமானத்தில் பயணி அடம் பிடித்துள்ளார்.
Recommended Video

டோக்கியோ: ஜன்னல் சீட்டுதான் வேணும்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சா பஸ் என்ன? ஃபிளைட் என்ன?
பஸ்-ல நாம எல்லாரும் முந்திக்கிட்டு ஏற காரணமே அந்த ஜன்னல் சீட்தான்... யாரையெல்லாம் கீழே இடிச்சி தள்ளுறோம்னு கூட தெரியாம தள்ளிவிட்டுட்டு, பஸ்ஸில் ஏறி ஜன்னல் சீட்டை பிடிச்சு, அதுல சாய்ற வரைக்கும் நமக்கு வேற எந்த சுய நினைவும் வராது!
நம்மள திட்டுபவர்களை கூட அப்பறம்தான் கவனித்து பார்ப்போம். ஜன்னல் சீட்டு கிடைச்ச சந்தோஷத்தில் திட்றதும், முனகறதும்கூட நம் காதில் விழாது!! இது பஸ்சுக்கு மட்டும் இல்லை... ட்ரெயின்ல இருந்து ஃப்ளைட் வரைக்கும் அந்த ஜன்னல் சீட் மேல ஒரு கண்ணுதான்!

ஜன்னல் சீட்
இப்படித்தான் ஒருத்தர் ஜப்பானில் ஃப்ளைட்டில் ஏறினார். புக் செய்துவிட்டுதான் ஏறினார். ஆனால் அவருக்கு என்னமோ ஜன்னல் சீட் கிடைக்காமல் போய்விட்டது. அந்த பயணிக்கோ ஜன்னல் சீட் இல்லையே என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார். விமானத்தில் இருந்த பணிபெண்ணை கூப்பிட்டு, ஜன்னல் சீட் தனக்கு வேண்டும் என்றார். அந்த பெண்ணோ ரூல்ஸ் இல்லை என்று சொல்லிவிட்டார்.
|
தொடர்ந்து தொந்தரவு
ஆனால் பயணிக்கோ, கிழித்து செல்லும் மேகங்களையும், கீழே உள்ள பூமியையும் பார்க்க வேண்டும் என்று ஆசை... இவ்வளவு செலவு பண்ணி ஃப்ளைட்டில் ஏறியும் ஜம்மென்று உட்கார்ந்து அந்த மேகத்தை பாக்க முடியலையேன்னு ஏகப்பட்ட ஏக்கம். அதனால் திரும்ப திரும்ப அந்த பெண்ணை கூப்பிட்டு, அந்த "பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு" கேட்டார். இதில கடுப்பாகிட்டார் அந்த பெண்.

மேகங்கள்
அவரை சமாளிக்கவே முடியலை. அதனால் ஒரு பேப்பர் எடுத்துட்டு வந்து அதில் வானத்தில் மேகங்கள் மிதப்பது போல் வேகவேகமாக வரைந்து விமானி பக்கத்தில் இருந்த அந்த ஜன்னலின் மீது ஒட்டிவிட்டார். இதை பார்த்ததும் அந்த பயணிக்கு ஷாக் ஆகிவிட்டது.

இணையத்தில் வைரல்
கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்சிட்டு இருந்த மேகம்கூட சுத்தமா தெரியாம போயிடுச்சு. ஃப்ளைட் இறங்கற வரைக்கும் வாயே திறக்காமல் கப்-சிப் என்று உட்கார்ந்துவிட்டார் மனுஷன்... ஆனால் பெண் வரைந்த அந்த படத்தை பார்த்தால் குழந்தைங்க வரையறதே தேவலாம் போல இருக்கு. இந்த படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications