பிள்ளைகளை தெருவில் திரிய விட்டு வீட்டில் செம தூக்கம் போட்ட அமெரிக்க "ஆத்தா"!
நியூயார்க: அமெரிக்காவில், தனது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றிக் கூட கவலைப்படாமல் அவர் பாட்டுக்கு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்து கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தி விட்டனர்.
விஷயம் என்னவென்றால், இந்த பெண்ணின் இரு மகள்களும் தங்களது விளையாட்டு சாமான்களை ஒரு டிராலியில் போட்டு ரோட்டுக்கு வந்து வீடு வீடாகப் போய் அதை விற்றுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவர்களிடம் வந்து விசாரித்தபோதுதான் விஷயம் தெரிய வந்தது.

அந்த இரு சிறுமிகளும் ( வயது 7 மற்றும் 9) வெறும் காலுடன் டிராலி நிறைய பொம்மைகளுடன் தெருவில் சுற்றி வந்துள்ளனர். அப்படியே வீட்டை விட்டு கிட்டத்தட்ட வெகு தூரம் வந்து விட்டனர். அவர்களைப் பார்த்த இரண்டு போலீஸார் வந்து விசாரித்தபோது, எங்களது அம்மாவுக்கு உதவியாக பொம்மை விற்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர்.
அவர்களுக்கு அவர்களது வீட்டு முகவரியைச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் வீட்டை சரியாக அடையாளம் காட்டினர். காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களது தாயார் ஏப்ரல் எமெரி் (வயது 27) நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அவரை எழுப்பிய காவலர்கள் நடந்ததைச் சொன்னபோது, உண்மையில் எனது மகள்கள்தான் என்னை எழுப்பியிருக்க வேண்டும். ஸ்கூலுக்குப் போகாமல், என்னையும் எழுப்பாமல், இப்படி நடந்து கொண்டு விட்டார்களே என்று கோபப்பட்டாராம்.
அதைக் கேட்டு புன்னகைத்துக் கொண்ட போலீஸார் ஏப்ரல் மீது சிறார்களிடம் அலட்சியம் காட்டியது என்ற வழக்கைப் போட்டு கைது செய்து கோர்ட்டுக்குக் கொண்டு போய் விட்டனர்.
பின்னர் அவர் 1000 டாலர் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டார். தற்போது இரு குழந்தைகளையும் அவர்களது தந்தையிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications