For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாலு போய் கத்தி வந்த கதை... தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: நீங்கள் இரவில் திடீரென்று கண் விழிக்கிறீர்கள்.மணி பார்ப்பதற்காக உங்கள் கைபேசியை எடுக்கிறீர்கள்.அதில் நேரம் அதிகாலை மூன்று மணி என்பதுடன் இரண்டு குறுஞ்செய்திகளும் இருக்கிறது.அதனை பார்க்கும் முன்பே அது டுவிட்டர் அழைப்பா,பேஸ்புக் அழைப்பா என்ற கனவிலேயே உங்களது தூக்கம் போய்விடும்.

தற்போதைய காலகட்டத்தில் முக்கால் பங்கு கைபேசி பயனாளிகளின் நிலை இந்த விபரீத தூக்கமின்மை வியாதிதான்.இதற்கு ஒரே வழி,கைபேசியை இரவில் இடம் மாற்றி வைத்துவிட்டு,பழைய கால கடிகார அலாரத்திற்கு மாறுவதுதான்.

கைப்பேசியை அமைதியாக்கி வைத்தாலும் இது சாத்தியப்படுவதில்லை. இதை பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியது:-

உடலுக்கும்,மனதுக்கும் கெடுதல்

உடலுக்கும்,மனதுக்கும் கெடுதல்

இது உடலுக்கும்,மனதுக்கும் கெடுதல் விளைவிக்கும் பழக்கம்.ஒரு முறை இரவில் நேரம் பார்க்க கைப்பேசியை எடுத்துவிட்டால் குறுஞ்செய்திகள்,பேஸ்புக்,டுவிட்டர் என அது நீண்டுகொண்டே போய் உங்களை தூக்கமின்மையில் தள்ளி விடும் என்கின்றனர்.

”இரவில் விழித்து கைபேசியை பார்க்கும் பொழுது

”இரவில் விழித்து கைபேசியை பார்க்கும் பொழுது

"இரவில் விழித்து இவ்வாறு கைபேசியை பார்க்கும் பொழுது அதில் உள்ள செய்திகளால் மனக்குழப்பம், நிம்மதியற்ற நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.அவ்வளவுதான் அதில் உள்ள செய்தியைப் பற்றியே பல மணி நேரங்களுக்கு சிந்தித்து தூக்கத்தை இழந்து விடுகிறீர்கள்",என்கிறார் கலிபோர்னிய பல்கலைகழகத்தின் தூக்கமின்மையால் வரும் நோய்களுக்கான ஆராய்ச்சி கழக தலைவர் டாக்டர் டேவிட்.எம்.கிளமன்.

கைப்பேசிகளால் ஏற்படும் தூக்கமின்மை நோயால்

கைப்பேசிகளால் ஏற்படும் தூக்கமின்மை நோயால்

அவரிடம் வரும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் 20வயதில் இருந்து 30வயதுக்கு உட்பட்டவர்கள்.அவர்கள் அனைவரும் கைப்பேசிகளால் ஏற்படும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்கிறார்.

அலாரத்திற்காகவே 54சதவீதம் மக்கள்

அலாரத்திற்காகவே 54சதவீதம் மக்கள்

ஒரு சர்வதேச ஆராய்ச்சியின் படி அலாரத்திற்காகவே 54சதவீதம் மக்கள் கைப்பேசியை பயன்படுத்துகின்றனர்.ஆனால்,அது வழிவகுப்பதோ நிரந்தர தூக்கமின்மை.

நோயில் தள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

நோயில் தள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

இதில் இருந்து இளைஞர்களுக்கான செய்தி என்னவெனில் விழிப்பதற்காக கைப்பேசியை உபயோகிக்க போய் அது உங்களை விபரீத தூக்கமின்மை நோயில் தள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

English summary
We've all been there. You wake up in the middle of the night and grab your smartphone to check the time - it's 3 a.m. - and see an alert. Before you know it, you fall down a rabbit hole of email and Twitter. Sleep? Forget it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X