For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அச்சுறுத்தும் ஓமைக்ரான்.. வெளிநாட்டவருக்கு தடை.. எல்லையை மூடிய இஸ்ரேல்

Google Oneindia Tamil News

இஸ்ரேல் : 2020ல் கொரோனா அச்சுறுத்தியதை போலவே தற்போது ஓமைக்ரான் அச்சுறுத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடை விதித்து இஸ்ரேல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்காக வரும் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதிப்பதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பால் உலக நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

தென்னாப்பிரிக்காவில் ஓமைக்ரான் எனப்படும் உருமாரிய கொரோனா கண்டுடிபிடிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம் இந்தியாவில் மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.

எல்லையை மூடிய இஸ்ரேல்

எல்லையை மூடிய இஸ்ரேல்

இந்நிலையில் இன்று இஸ்ரேல் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஓமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு இன்று முதல் அனைத்து வெளிநாட்டினருக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பணிகளைத் தவிர வேறு எந்த காரணங்களுக்காக வந்தாலும் அனுமதிக்கவேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா நெகட்டிவ் உள்ளவர்கள் தங்களை 3 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்னர்தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தனது எல்லையை திறக்க இஸ்ரேல் அனுமதி அளித்திருந்தது.

பிற நாடுகளில் ஓமைக்ரான்

பிற நாடுகளில் ஓமைக்ரான்

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்ற 2 இரண்டு பயணிகளுக்கு ஓமைக்ரான் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளும் தங்கள் நாட்டில் சிலருக்கு ஓமைக்ரான் வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தின. இதை அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதன் பின்னர் பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவிற்கு தங்கள் நாட்டு மக்கள் செல்வதற்கும், தென்ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கும் தடை விதித்தன.

Recommended Video

    Omricon Covid variant from South Africa Triggers World | OneIndia Tamil
    பொருளாதா நிபுணர்கள் கவலை

    பொருளாதா நிபுணர்கள் கவலை

    இதுகுறித்து கவலைத் தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள், நிபுணர்கள் அடுத்த 2 வருடத்திற்கு உலகப் பொருளாதாரம், நிதியை ஓமைக்ரான் ஆட்டிப் படைக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். இஸ்ரேலைப் போலவே தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தியா, மெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கோவிட் டெஸ்ட் எடுக்கவும், அவர்களுக்கு பரிசோதனை முடிவு நெகட்டிவ் வந்தால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிப்பது எனவும் முடிவு செய்துள்ளது.

    English summary
    The Israeli government has now issued an order banning all foreign travelers as a precautionary measure against the Omigron threat, similar to the Corona threat in 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X