விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா லெஜண்ட் கிரிக்கெட் வீரர்.. பரபரப்பு சம்பவம்
மெர்ல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவன் ஷேன்வார்ன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன்வார்ன். தனது ரிஸ்ட்ஸ்பின்னர் மூலம் பல எதிரணி வீரர்களையும் ஜாம்பவான்களின் களத்தில் தெரிக்கவிட்டவர். சச்சின் , லாரா, சேவாக் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களையே தனது அபார சுழற்பந்து வீச்சால் தடுமாற வைத்தவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன்வார்ன். டெஸ்ட் போட்டியில் மட்டும் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போதுவரை பல பேட்ஸ்மேன்களின் கனவில் சிம்ம சொப்பனமாக திகழ்பவர்.
1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய வார்ன், தனது சூழல் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். ஸ்பின்னர்கள் என்றாலே ஆல் டைம் பெஸ்ட் வரிசையில் ஷேன்வார்னுக்கு தனி இடம் உண்டு
இவ்வளவு புகழ் இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வார்னேவுக்கு புதிதல்ல. மைதானத்தில் சிகரெட் பிடித்தது , போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வாகனம் ஓட்ட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது என அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியவர் வார்ன். தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனை செய்துவரும் வார்ன், ஆஷஸ் தொடரில் கலந்து கொண்டு பல சுவராசியமான ஆட்ட நுணுக்கங்களை விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.
தனது மகன் ஜாக்சனுடன் ஒரு பெரிய பைக்கில் பயணம் மேற்கண்ட 52 வயதான ஷேன் வார்னே விபத்தில் சிக்கியுள்ளார். சுமார் 15 மீட்டர் பள்ளத்தில் விழுந்த அவரை அவரது மகன் ஜாக்சன் மீட்டுள்ளார். முதலில் உள்காயம் தான் என நினைத்து வீட்டிலேயே ஓய்வு எடுத்த பிறகு கடும் வலி ஏற்படவே மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவருக்கு கணுக்கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருப்பது தெரியவந்தது.
Recommended Video
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆஷஸ் தொடரில் அவர் பங்கேற்று கமெண்டரி செய்வாரா என்பது சந்தேகம்தான். இதனால் அவரது கக்மெண்ட்ரிகளை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications