For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரெஞ்சு தெருக்களில் ஓடிய ஒயின் வெள்ளம்.. பீப்பாய்களைப் போட்டு உடைத்து மக்கள் போராட்டம்!

Google Oneindia Tamil News

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் போராட்டக்காரர்கள் ஒயின் பீப்பாய்க்களை உடைத்ததால், அதில் இருந்த ஒயின் சாலைகளில் வெள்ளம் போல ஓடியது.

உள்நாட்டு தேவைக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயினை மலிவான விலையில் பிரான்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இதனை உள்நாட்டு மது உற்பத்தியாளர்களும் சில போராட்டக்குழுவினரும் எதிர்த்து வருகின்றனர்.

France town flooded with wine after protesters crack open vats

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் இருந்து சுமார் 4000 கோடி லிட்டர் ஒயின் வகைகளை பிரான்ஸ் நாட்டு மது வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ளார்களாம்.

இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயின் - பிரான்ஸ் எல்லைப்பகுதி வழியாக ஒயினை கொண்டு வந்த 5 டேங்கர் லாரிகளை வழிமறித்து சிறைபிடித்தனர். மேலும், அவற்றில் இருந்த சுமார் 100,000 பாட்டில் அளவிலான ஒயினை வீதியில் கொட்டி நாசப்படுத்திவிட்டார்கள்.

இந்நிலையில், சிடே என்ற துறைமுக நகரத்தில் உள்ள கடை ஒன்றை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அங்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒயின் வகைகளை சேதப்படுத்தினர். இதனால், அங்கு ஐந்து பீப்பாய்களில் இருந்த ஒயின் உடைந்து வெளியேறியது. இதனால், அங்கு வெள்ளம் போல ஓடிய ஒயின் சாலைகள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

English summary
A protest group has cracked open vats of wine in a southern French town, sending thousands of litres into the streets, local media have reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X