For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செய்வீங்களா ப்ளீஸ்?: பெண் கல்விக்காக உங்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கும் மலாலா

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: உலகில் உள்ள சிறுமிகள் 12 ஆண்டுகள் இலவசமாக கல்வி கற்க உதவி செய்யுமாறு குளோபல் பார்ட்னர்ஷிப் ஃபார் எஜுகேஷனை வலியுற்த ஒரு கடிதத்தில் கையெழுத்திடுமாறு மலாலா யூசப்சாய் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய் தாலிபான்களால் தலையில் சுடப்பட்டார். இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று மறுஜென்மம் எடுத்த அவர் உலகில் உள்ள சிறுமிகள் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

Fund 12 Years of Education for Girls Around the World: Malala

இந்நிலையில் மலாலா உலக மக்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

உலகில் 60 லட்சம் சிறுமிகள் கல்வி கற்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பள்ளி செல்ல முடியாமல் உள்ளது அல்லது பள்ளியில் இருந்து விரைவில் நிற்க உள்ளனர். உலக சிறுமிகளுக்கு 12 ஆண்டுகள் இலவச, பாதுகாப்பான, தரமான துவக்க மற்றும் உயர் நிலைக் கல்வியை அளித்த உலக நாடுகளின் தலைவர்கள் முன் வந்துள்ளனர்.

Fund 12 Years of Education for Girls Around the World: Malala

அவர்களின் வாக்குறுதியை செயல் வடிவம் ஆக்கும் முயற்சியில் குளோபல் பார்ட்னர்ஷிப் ஃபார் எஜுகேஷன்(ஜி.பி.இ.) ஈடுபட வேண்டும். உலக சிறுமிகளுக்கு 9 ஆண்டுகள் இலவச கல்வி வழங்கி வருகிறது ஜி.பி.இ. உலகில் உள்ள ஏழை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்க ஜி.பி.இ. நிதி அளித்து வருகிறது. உலக நாடுகள் அளிக்கும் பணம் ஜி.பி.இ.க்கு செல்கிறது. அந்த பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்று ஜி.பி.இ. போர்டு வரும் டிசம்பர் மாதம் முடிவு செய்ய உள்ளது.

ஜி.பி.இ. போர்டு உலக சிறுமிகள் 12 ஆண்டுகள் இலவச கல்வி பெற வாக்களிக்க வேண்டும். அதற்காக உலக மக்களாகிய நீங்களும் என்னுடன் சேர்ந்து 12 ஆண்டு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்று ஜி.பி.இ. நபர்களை வலியுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Pakistan girl Malala Yousafzai has requested world people to urge GPE to come forward to provide free education for girls for 12 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X