ஆப்கானிஸ்தானில் பள்ளி சென்றதற்காக 3 மாணவிகள் முகத்தில் ஆசிட் வீச்சு: 2 பேர் கவலைக்கிடம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு படிக்க சென்ற காரணத்திற்காக 3 சிறுமிகள் மீது 2 பேர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இருக்கும் பெரிய பள்ளி ஒன்றில் 16 முதல் 18 வயது வரையிலான 3 சிறுமிகள் படித்து வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அன்று அவர்கள் 3 பேரும் சேர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மாணவிகளின் முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவிகள் அருகில் உள்ள நூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். 3 மாணவிகளில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பள்ளிக்கு சென்றதற்கு இது தான் தண்டனை என்று கூறி அந்த 2 பேர் தங்கள் மீது ஆசிட் வீசியதாக மாணவிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications