• search

நாங்கள் சாக விரும்பவில்லை.. வாழ விரும்புகிறோம்.. சிரிய குழந்தைகள் கதறல்.. இவர்கள் செய்த தவறு என்ன ?

By Shyamsundar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   சாலையில் உண்மையாக ஓடும் ரத்த வெள்ளம்...வீடியோ

   டமாஸ்கஸ்: கை இருக்கும் குழந்தைக்கு கால் இல்லை, கால் இருக்கும் குழந்தைக்கு கை இல்லை. இரண்டும் சரியாக இருக்கும் குழந்தைக்கு உயிர் இல்லை. இதுதான் சிரியாவில் இருக்கும் குழந்தைகளின் நிலை.

   ஒரு போர், அதுவும் உள்நாட்டு போர் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறது. ஒரு நாட்டு அரசு, அந்நாட்டு மக்களுக்கு எதிராகவே செய்யும் அரக்கத்தனம்தான் இந்த போர்.

   எந்த பாவமும் அறியாத குழந்தைகள்தான் இதில் கொத்து கொத்தாக மடிகிறார்கள். ஆனால் இன்னும் கூட அந்த அழுகுரல் கேட்காமல் புரட்சியாளர்களும், சிரியா அரசும், ரஷ்யாவும் அடுத்த தாக்குதலுக்கு ஆயத்தம் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்.

   போர்

   சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 8 நாட்களில் மட்டும் இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

   அதிகம் குழந்தைகள்

   இந்த போரில் இறந்த நபர்களில் 65 சதவிகிதம் பேர் குழந்தைகள். மேலும் காயம் அடைந்த 80 சதவிகிதம் பேர் குழந்தைகள். உயிருக்கு போராடும் முக்கால்வாசி பேர் குழந்தைகள். அங்கே அகப்பட்டு இருக்கும் 3,98,859 பேரில் 50 சதவிகிதம் பேர் குழந்தைகளாக இருக்கலாம் என்று ஐநா தெரிவித்து இருக்கிறது.

   குறி

   குழந்தைகளை குறிவைத்துதான் இங்கே கெமிக்கல் குண்டுகள் போடப்படுகிறது. பெரியவர்கள் கூட கஷ்டப்பட்டு இந்த குண்டுகளின் தாக்குதலை தாங்கி கொள்ள முடியும். ஆனால் சிறியவர்கள் இதில் தாக்குப்பிடித்து இருப்பது மிகவும் கஷ்டம். அதற்காகவே இந்த குண்டுகள் போடப்படுகிறது.

   இடைபாடு புகை

   சிலர் குண்டுகள் காரணமாக மரணம் அடையாமல் கட்டிடங்கள் இடிந்து விழுந்து மரணம் அடைந்து இருக்கிறார்கள். பல குழந்தைகள் புகையில் மூச்சு விட முடியாமல் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

   சாக வேண்டாம்

   இதில் நூர், அலா என்று சிறுமிகள் ''நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் எங்களை சுற்றி குண்டுகள் போடப்படுகிறது. இந்த முட்டாள் தனத்தை நிறுத்துங்கள். நாங்கள் வாழ வேண்டும். நாங்கள் சாக விரும்பவில்லை'' என்று வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அப்போது சரியாக அங்கு குண்டு போடப்படுகிறது.

   சிரமம்

   கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் இந்த சிறுமி கதறி இருக்கிறாள். அதேபோல் மூச்சு குழலில் குளோரின் குண்டுகள் காரணமாக பலருக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

   என்ன பதில்

   இந்த சிறுமி, தன் குடும்பம் கொல்லப்பட்டது கூட தெரியாமல் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் எடுக்கும் போட்டோவிற்காக சிரிக்கிறாள். உண்மையான போரின் குரூரம் அந்த சிரிப்பில் தெரிகிறது. இந்த சிரிப்பிற்கு என்ன பதில் சொல்ல முடியும்.

   இன்னொன்று

   அங்கு போரை நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட பின்பும் கூட போராளிகள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடக்கிறது . ஆனால் அங்குதான் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். கெமிக்கல் குண்டு காரணமாக பாதிக்கப்பட்ட இந்த சிறுமியின் புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது.

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   War in Syria kills 600 people in just 8 days. The war is going on between Syria government army and Anti goverment forces. Syria army leads the with the help of Russia. Nearly 393,000 lakh people trapped inside the Syrian enclave of eastern Ghouta.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more