இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. மேலும் 3 பணயக்கைதிகளை ஒப்படைத்தது ஹமாஸ்!
காசா: இஸ்ரேலுக்கும்-ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இன்று பணயக்கைதிகள் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் தரப்பில் 3 கைதிகளும், இஸ்ரேல் தரப்பில் 100க்கும் அதிகமான கைதிகளும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

தொடக்கத்தில் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாகத்தான் இஸ்ரேல் இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞசமாக ஆக்கிரமித்த அவர்கள், இப்போது பாலஸ்தீனம் என்று ஒரு நாடே இல்லாத அளவுக்கு அதை சுருக்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இது ஒரு பெரிய போரை தொடங்கி வைத்திருக்கிறது.
இந்த போரில் ஹமாஸை ஒழிப்பதாக கூறி, 42,000க்கும் அதிகமான பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவித்தது. காசா எனும் துண்டு நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்தம் குறித்து சீனாவும், ரஷ்யாவும் வலியுறுத்தியும் கூட, அமெரிக்காவை வைத்து இஸ்ரேல் தப்பித்துக்கொண்டது. கடைசியாக ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை ஒட்டி இரு நாடுகளும் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.
ஹமாஸ் 3 இஸ்ரேலியர்களை விடுவித்திருக்கிறது. பதிலுக்கு, இஸ்ரேல் நூற்றுக்கும் அதிகமான பாலஸ்தீனர்களை விடுவித்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம், காசாவை நாங்கள் வாங்குகிறோம் என அமெரிக்கா புதிய சர்ச்சையை கையில் எடுத்திருக்கிறது.
காசாவில் உள்ள மக்களை எகிப்துக்கும் ஜோர்டனுக்கும் அனுப்பிவைத்துவிட்டு, காசா நிலப்பரப்பை நாங்கள் வாங்கி டெவலப் செய்கிறோம் என்று டிரம்ப் பேசியிருந்தார். இதற்கு அமெரிக்காவின் எதிரி நாடுகள் மட்டுமல்லாது, அதன் நட்பு நாடுகளே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. டிரம்ப் பேசுவதை போல, சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் இப்படி பேச தொடங்கினால் என்ன நடக்கும்? மூன்றாம் உலகப்போர் வெடிக்காதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, மருத்துவ உதவிக்கான வாகனங்கள் 12,000 காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரை 8500தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தினமும் 50 பெட்ரோல், டீசல் டேங்கர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 15 என்கிற எண்ணிக்கையில்தான் இவை அனுமதிக்கப்படுகின்றன. தற்காலிக வீடுகள் 60,0000 உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஒன்றுகூட அமைக்கப்படவில்லை. குடிசைகள் 2 லட்சம் தேவை. ஆனால் வெறும் 20,000 மட்டுமே அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதெல்லாம் பாலஸ்தீன மக்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications