• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

3000 தீவிரவாதிகளையும் 48 மணி நேரத்தில் தூக்கில் போட வேண்டும்... பாக். ராணுவ தளபதி அதிரடி கோரிக்கை!

|

இஸ்லாமாபாத்: தாலிபான் தீவிரவாதிகளுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் பாகிஸ்தான் சிறைகளில் தற்போது தூக்குத் தண்டனை விதித்து அடைக்கப்பட்டுள்ள 3000 தீவிரவாதிகளையும் 48 மணி நேரத்திற்குள் தூக்கில் போட்டு விட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தாலிபான்களையும் முழுமையாக அழிப்போம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு வெளியே நடக்கும் குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களை பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் தூண்டி வருகிறது. நாட்டின் எல்லையிலோ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுகிறது, தீவிரவாதிகளையும் ஊடுறுவச் செய்கிறது.

Hang 3,000 terrorists in 48 hours: Pak army chief to Sharif

ஆனால் இன்று பாகிஸ்தானுக்குள் பிரச்சினை என்று வந்ததும் பாகிஸ்தான் ராணுவம் பதறியுள்ளது. பாகிஸ்தானை தீவிரவாதிகளிடமிருந்து காப்போம், தீவிரவாதிகளை முழுமையாக அழிப்போம் என்று கூக்குரலிடுகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப்.

பெஷாவரில் தாலிபான் தீவிரவாதிகள் 132 மாணவ, மாணவியர் உள்பட 141 பேரை கொடூரமாகக் கொன்ற தாலிபான்களுக்கு ஷெரீப் கடும் எச்சரிக்கை விடுத்து டிவிட்டரில் செய்தி போட்டுள்ளார்.

அதில், பாகிஸ்தான் சிறையில் உள்ள 3000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை 48 மணி நேரத்திற்குள் தூக்கில் போட வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப்பைக் கேட்டுக் கொண்டுள்ளேன். ஒரு தீவிரவாதியையும் விடாமல் அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

இந்தியாவில், மும்பையில் பயங்கரவாத செயலைச் செய்த கும்பலை வழி நடத்திய மிக முக்கிய தலைவரன லஷ்கர் இ தொய்பாவின் ஜாகி உர் ரஹ்மானை சிறையிலிருந்து ஜாமீனில் விடுவித்த அடுத்த நாள் இப்படி ஒரு கோரிக்கையை அவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இதற்கு முன்பு இருந்த தளபதிகளை விட தாலிபான்கள் விஷயத்தில் சற்று கடுமை காட்டி வருபவர் ஷெரீப். இவர் வந்த பிறகுதான் தாலிபான்களுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்தது. தாலிபான்களுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடுக்கவும் உத்தரவிட்டவர் ஷெரீப்.

ஷெரீப் விடுத்துள்ள இன்னொரு டிவிட்டில், இதற்கு மேலும் பொறுக்க முடியாது. இனி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக யார் பேசினாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாலிபான் தீவிரவாதிகளே பாகிஸ்தான் ராணுவத்தினர் உங்களைத் தேடி வருகின்றனர். அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் மதிப்பவர்கள். உங்களைப் போல கோழைகள் அல்ல. உங்கள் ஒருவரையும் அவர்கள் விட மாட்டார்கள் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார் ஷெரீப்.

இதற்கிடையே கைபர் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை தீவிரவாதிகளுக்கு எதிராக மிகத் தீவிரமான தாக்குதலை தொடங்கியுள்ளதாம். ஒரு மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அதில் பலர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Army chief Gen Raheel Sharif, arguably the most powerful man in Pakistan, tweeted on Wednesday, "Asked PM Nawaz Sharif to hang all terrorists. More than 3,000 terrorists should be hanged in next 48 hours." A day later, Lashkar-e-Taiba's commander Zaki-ur Rahman Lakhvi was out on bail. Gen Sharif, who has frontally taken on the Taliban, is credited to have changed the army's approach towards extremist groups, from one of using them as allies — as "strategic assets" against "enemies" like India — to launching an uncompromising offensive against them.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more