மெட்ரோ ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு.. ரயில் முன் பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்.. திக்திக் சிசிடிவி காட்சிகள்
பிரஸ்ஸல்ஸ்: சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பெண்ணை தள்ளிய திக்திக் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் காண்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் உள்ளது.
இந்நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திக்திக் காட்சி
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ரோஜியர் மெட்ரோ நிலையத்தில் தான் இந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த 55 வயது மதிக்கத்தக்கப் பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர் சுரங்க ரயில் பாதையில் வேண்டுமென்றே தள்ளிவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது
அந்த வீடியோவில் 55 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தண்டவாளம் அருகே ரயிலுக்குக் காத்திருக்கிறார். அப்போது சரியாக அந்த நிலையத்திற்குள் ரயில் வருவதைப் பார்த்த கருப்பு நிற உடை அணிந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை திடீரென தண்டவாளத்தின் மீது தள்ளிவிடுகிறார். நல்வாய்ப்பாக இதைச் சரியான நேரத்தில் பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக அவசர பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்துகிறார்.

காயமில்லை
இதையடுத்து உடனடியாக நடைமேடையில் இருந்த இரண்டு இளைஞர்கள் தண்டவாளத்தில் இறங்கி அந்த பெண்ணை மீட்டனர். இதனால் அந்தப் பெண் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதையடுத்து அந்த பெண் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பெண்ணுக்குக் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் அந்த இளைஞர்
மேலும், அந்த வீடியோவில் அப்பெண்ணைத் தள்ளிவிடும் முன்பு இளைஞர் பதற்றமாக இருப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனால் அந்த நபர் நீண்ட நேரமாக மெட்ரோ நிலையத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருக்கிறார். அப்போது தான் ரயில் வருவதைப் பார்த்ததும் திடீரென தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் உடனடியாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார். இருப்பினும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அந்த இளைஞரை அருகிலிருந்த மற்றொரு மெட்ரோ நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பாராட்டு
அந்த 23 வயது இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலின் ஓட்டுநர் மட்டும் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால், அப்பெண்ணுக்கு மோசமான காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் செயல்பட்ட அந்த ரயில் ஓட்டுநரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications