For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூனை மாதிரி நுழைந்த "கில்லர்".. மாஸ்க், மிலிட்டரி டிரஸ், துப்பாக்கி.. 3 பேர் பலி.. 11 பேர் சீரியஸ்

பிரேசில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்

Google Oneindia Tamil News

பிரஸ்ஸிலா: பிரேசிலில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.. 2 பள்ளிகளில் 16 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் என்பது உலகம் முழுவதுமே பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த வருடம் மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன..

அமெரிக்காவில் மட்டும்தான் உலகிலேயே மக்கள் தொகையைக் காட்டிலும் துப்பாக்கிகள் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.. அதாவது 100 பேருக்கு 120.48 துப்பாக்கி இருக்கிறதது.. ஆனால், எல்லாரிடமும் துப்பாக்கி இருப்பது தான் பாதுகாப்பு என்று அம்மக்கள் நினைக்கிறார்களாம்..

அமெரிக்காவில் வால்மார்ட் ஸ்டோரில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் பலிஅமெரிக்காவில் வால்மார்ட் ஸ்டோரில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் பலி

 மிலிட்டரி டிரஸ்

மிலிட்டரி டிரஸ்

இந்த லிஸிட்டில் பிரேசிலையும் சேர்த்து கொள்ளலாம்.. கடந்த மாதம்கூட திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் 4 அப்பாவி பொதுமக்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.. இப்போதும் அதுபோலவே ஒரு பகீர் நடந்துள்ளது.. எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், தலைநகர் விக்டோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே, அராகுரூஸ் என்ற இடம் அமைந்துள்ளது.. ஒரு சிறிய நகரமாகும்.. இந்த நகரத்தில், திடீரென மர்ம ஒருவர் நுழைந்துவிட்டார். இவர் ராணுவ டிரஸ்ஸை அணிந்திருந்தார்.. முகமூடியும் போட்டிருந்தார்.. அங்கிருந்த 2 பள்ளிகளில் அத்துமீறி இந்த நபர் புகுந்து, துப்பாக்கியை எடுத்து, அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறார்..

 கண்ணிமைக்கும் நேரம்

கண்ணிமைக்கும் நேரம்

கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் சுட்டு பொசுக்கி உள்ளார்.. இந்த சம்பவத்தில் 3 பேர் அங்கேயே சுருண்டு உயிரிழந்தனர்... 11 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி உள்ளனர்.. இந்த தகவலை, அம்மாகாண கவர்னர் ரெனேட்டோ காசாகிராண்ட் உறுதிப்படுத்தி உள்ளார்... தாக்குதல் நடத்தப்பட்ட, அந்த 2 பள்ளியுமே அராகுரூசில்தான் இருக்கின்றன.. பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் என்பது அப்பள்ளிகளின் பெயராகும். இதில் ஒன்று அரசுப் பள்ளி, இன்னொன்று தனியார் பள்ளியாகும்.

 ஆட்டோமேட்டிக்

ஆட்டோமேட்டிக்

இந்த இரட்டை தாக்குதலுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இரங்கல் தெரிவித்து உள்ளார்... அதேபோல, இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.. உயிரிழந்தவர்களின் நினைவாக 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்பபட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, விரைவில் புதிய விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அம்மாகாணம் சார்பில் கூறப்பட்டுள்ளது.. ஆனால், இந்த தாக்குதலை நடத்திய நபருக்கு, 16 வயது இருக்கும் என்கிறார்கள்.. ஆகிய இரு கல்வி நிலையங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

 கழட்டாத மாஸ்க்

கழட்டாத மாஸ்க்

அந்த மர்ம நபர் கையில், தானியங்கி துப்பாக்கி வைத்திருந்தாராம்.. மிலிட்டரியின், குண்டு துளைக்காத சட்டையும் அணிந்திருக்கிறார்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளும்வரை, முகமூடியை கழட்டவேயில்லை.. துப்பாக்கிச் சூடு நடத்துவது அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளது... உயிரிழந்தவர்களில் 2 பேர் டீச்சராம், ஒருவர் மாணவர்.. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தார்களா என்பது குறித்த தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை... 16 வயது என்கிறார்களே தவிர, அந்த நபரை அடையாளம் காண்பது கடினமாக இருக்கிறதாம்.

சீரியஸ்

சீரியஸ்

பிரேசிலின் சோஷியல் மீடியா முழுவதும் இந்த சூப்பாக்கிச் சூடு குறித்த வீடியோதான் வெளியாகி, பதைபதைக்க வைத்துள்ளது.. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், குற்றவாளியை கண்டறிய அதிகாரிகளை அனுப்பி உள்ளதாகவும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாண ஆளுநர் ரெனாடோ தெரிவித்துள்ளார்.. காயமடைந்த 11 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.. ஆனால் அவர்கள் சீரியஸயாக இருக்கிறார்களாம்.. இதனால் உயிரிப்பு மேலும் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

English summary
Heartbreaking news and brazil school shooting 3 killed, 11 severely injured after gunman openfires
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X