For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீமோதெரப்பிக்கு பதில் இம்யூனோதெரப்பி.. புற்றுநோய் இல்லா அமெரிக்கா.. இது ஒபாமாவின் திட்டம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கடைசி நாடாளுமன்றப் பேச்சு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. வழக்கமான தனது சாதனைகளின் பட்டியலே அதில் பெரும்பான்மையாக இருந்தது. இருப்பினும் புற்றுநோய் ஒழிப்பு குறித்து அவர் கூறியது கருத்தைக் கவருவதாக இருந்தது.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையெட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர், ‘நம் அனைவரும் இணைந்து புற்றுநோய் இல்லாத அமெரிக்காவை உருவாக்குவோம். புற்றுநோய்க்கு நிரந்தரமாக முடிவு கட்டுவோம்' என்றார்.

அந்தப் பேச்சின்போது புற்றுநோய்க்குத் தனது மகனைப் பறி கொடுத்த துணை அதிபர் ஜோ பிடெனைக் காட்டி பேசினார் ஒபாமா. மேலும், புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு காண்பதே தனது எதிர்கால லட்சியம் என்றும் ஒபாமா தெரிவித்தார்.

மூன்ஷூட் 2020...

மூன்ஷூட் 2020...

முன்ஷட் 2020 என்ற திட்டம் புற்றுநோய் ஒழிப்பு தொடர்பாக அமெரிக்காவில் செயல்படுத்தப்படுகிறது. இது தனியாரால் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். இந்தத் திட்டம் ஜனவரி 11ம் தேதி முறைப்படி தொடங்க வைக்கப்பட்டது. இதில் கீமோதெரப்பிக்குப் பதில் இம்யூனோ தெரப்பி மூலம் புற்றுநோயை குணமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டம்...

புதிய திட்டம்...

அதாவது புற்று நோய் செல்களை நேரடியாக கொல்வதற்குப் பதில் நமது உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி அதன் மூலம் புற்றுநோயை காலி செய்வதே இதன் திட்டமாகும். பொதுவான சிகி்ச்சை அளிக்காமல் ஒவ்வொரு நோயாளிக்கும் தேவையான அளவில் இந்த சிகிச்சை தரப்படும்.

5 ஆண்டுக்குள்...

5 ஆண்டுக்குள்...

இன்னும் ஐந்து ஆண்டுக்குள் இதை பரீட்சார்த்த முறையில் செய்து பார்த்து அமலுக்குக் கொண்டு வரவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுக்குள் அதாவது 2020க்குள் 20 வகையான புற்றுநோய்களுக்கு புதிய சிகிச்சை முறையை வெற்றிகரமாக பரிசோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நான்ட்வொர்க்ஸ்...

நான்ட்வொர்க்ஸ்...

இந்தத் திட்டத்தை நான்ட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் தலைமை தாங்கி நடத்தவுள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவாக இருப்பவர் பாட்ரிக் சூன் ஷியோங் என்பவர். இவர்தான் பிடெனின் மகன் புற்றுநோயால் போராடிக் கொம்டிருந்தபோது சிகிச்சைக்கு உதவியவர்.

புற்றுநோய் ஒழிப்புத்திட்டம்...

புற்றுநோய் ஒழிப்புத்திட்டம்...

பாட்ரிக்கின் உளவுப்பூர்வமான பணி பிடெனுக்குப் பிடித்து விட்டதால்தான் அவரது தலைமையில் தற்போது அமெரிக்கா இந்த புற்றுநோய் ஒழிப்புத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

தனியாரின் திட்டம்...

தனியாரின் திட்டம்...

பாட்ரிக் பரிந்துரைத்த திட்டம்தான் இந்த மூன்ஷூட் 2020 திட்டமாகும். இதற்கு அரசு முழு உதவிகளைச் செய்தாலும் கூட முழுக்க முழுக்க இது தனியாரால் மேற்கொள்ளப்படும் திட்டமாகும்.

ஒபாமாவின் ஆதரவு...

ஒபாமாவின் ஆதரவு...

இதற்கு ஒபாமா முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு பரிசோதனைகள் நடைபெறவுள்ளன. இதற்குத் தேவையான ஒப்புதல்களை அமெரிக்க அரசு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தாமதம் தவிர்க்கப்படும்...

தாமதம் தவிர்க்கப்படும்...

வழக்கமாக நோயாளிகளிடம் நடைபெறும் பரிசோதனைகள் தொடர்பான அனுமதி கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்படும். ஆனால் இந்தத் திட்டத்தில் அந்தத் தாமதம் தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.

English summary
It wasn't expected to be a major State of the Union address a final speech from a president in his last term, recounting achievements and expressing hope for the future. And then Obama made some news: "Let’s make America the country that cures cancer once and for all." And to lead the administration's effort, the president picked VP Joe Biden, who recently lost his son Beau to cancer, and who has said that finding a cure is one of his major life goals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X