For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. பதறிய சவுதி.. பின்னணியில் ஈரான்.. போர் வருகிறதா?

சவுதி அரபியாவில் உள்ள மெக்கா மசூதியை நோக்கி ஏவுகணைகள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணையால் பதறிய சவூதி

    ரியாத்: சவுதி அரபியாவில் உள்ள மெக்கா மசூதியை நோக்கி ஏவுகணைகள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    ஈரானுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையிலான சண்டை தற்போது எண்ணெய் வள நாடுகளுக்கு இடையிலான சண்டையாக மாறி உள்ளது.

    ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவ அமெரிக்கா தடை செய்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    மண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு மண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த தடை காரணமாக ஈரான் சவுதி மற்றும் அமீரகத்திற்கு சொந்தமான போர் கப்பல்களை தாக்கி அழித்தது. ஈரானுக்கு சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஈரான் நேரடியாக பொறுப்பேற்கவில்லை. அமெரிக்கா இதில் ஈரான் மீது குற்றஞ்சாட்டியது.

    உதவி கேட்டது

    உதவி கேட்டது

    இதையடுத்து ஈரான் எல்லையில் அமெரிக்கா தனது ராணுவ படைகளை குவித்தது. இதனால் கடுமையான பரபரப்பு நிலவியது. இதனால் ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களிடம் உதவி கேட்டது. ஈரானில் உள்ள ஹவுதி போராளி குழுக்களிடம் ஈரான் உதவி கேட்டது. இது கடந்த வாரம்தான் நடந்தது.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்த நிலையில் இன்று புதிய திருப்பமாக இன்று சவுதி மீது ஹவுதி போராளி குழு தாக்குதல் நடத்தி உள்ளது. ஷியா அமைப்பான ஹவுதி போராளி குழு ஏவுகணை மூலம் மெக்கா மற்றும் ஜெட்டா நகரை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி உள்ளது. முக்கியமாக மெக்கா மசூதியை நோக்கி இந்த ஏவுகணைகள் சென்றுள்ளது.

    அழிக்கப்பட்டது

    அழிக்கப்பட்டது

    ஆனால் இந்த இரண்டு ஏவுகணைகளும் கடைசி நேரத்தில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் மூலம் சவுதியால் தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் ரம்ஜான் மாதத்தில் நிகழ வேண்டிய மிகப்பெரிய தாக்குதல் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதற்கு பின் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

    போர் நடக்குமா

    போர் நடக்குமா

    இதனால் தற்போது போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமான, சவுதி தனது ராணுவத்தை தயார் நிலையில் இருக்க சொல்லியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சவுதி அரசர் சல்மான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

    English summary
    Houthi missiles heading toward Mecca, Saudi Arabia intercepts the attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X