Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உளவாளி தந்த சீக்ரெட் தகவல்.. நொடி பிசகாமல்.. தாக்கிய இஸ்ரேல்.. ஹிஸ்புல்லா தலைவரை தூக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: கடந்த ஒரு மாதமாக ஹிஸ்புல்லா இயக்கத்தை கதி கலங்க வைத்து வருகிறது இஸ்ரேல். சமீபத்தில்தான் துப்பாக்கி படத்தில் ஒரே நேரத்தில் 12 தீவிரவாதிகளை விஜய் மற்றும் கேங்க் சுடும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும். அந்த காட்சி போலவே.. ஒரே நேரத்தில்.. சொல்லி வைத்தார் போல ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்.. ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரது பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். .

israel palestine israel palestine conflict

ஒரு ஈரானிய இன்பார்மர் இஸ்ரேலுக்கு கொடுத்த முக்கியமான உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் உள்ள சுரங்கம் ஒன்றில் அவர் தஞ்சம் அடைந்து உள்ளார் என்று ஈரானிய இன்பார்மர் இஸ்ரேலுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஈரானின் உளவாளி ஒருவர்தான்.. தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நஸ்ரல்லாவின் இருப்பிடம் குறித்து இஸ்ரேலியப் படைகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

எப்படி நடந்தது:

இஸ்ரேலிய ராணுவம் F-35 போர் விமானங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்தி உள்ளது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் உள்ள பங்கரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தளபதி இஸ்ரேல் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். அவரின் இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, ஈரானின் குத்ஸ் படையின் உறுப்பினர் உட்பட ஹிஸ்புல்லா தலைவர்கள் பலரும் பங்கரில் பதுங்கி உள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் உள்ள பங்கரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார்.

இந்த தாக்குதலில் இரண்டு டன் எடையுள்ள ஆறு குண்டுகளை வீசி உள்ளது இஸ்ரேல் விமானப்படை. இதில் 30 மீட்டர் ஆழமுள்ள பெரிய பள்ளத்தை உருவானதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் அருகே இருந்தே இரு கட்டிடங்களும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. வெடிச்சத்தம் பெய்ரூட் நகருக்கு வெளியே வெகு தொலைவில்.. 50 கிமீ தூரம் வரை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் 2006 க்குப் பிறகு ஹிஸ்புல்லா எதிர்கொண்ட மிகப்பெரிய தாக்குதலில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நஸ்ரல்லாவின் மரணம் அந்த அமைப்பை மொத்தமாக நொறுக்கி போட்டு உள்ளது. நஸ்ரல்லாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது உறவினர் ஹஷேம் சஃபிதீன், ஹிஸ்புல்லாவின் தலைவராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

யார் இந்த ஹிஸ்புல்லா? சின்ன விளக்கம்: லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கம் ஈராக்கின் குடையின் கீழ் வாழும் பெரிய அரசியல் இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்கா கூறுவது உண்டு. இஸ்ரேலில் அவ்வப்போது பாலஸ்தீனம் நடத்தும் தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா முக்கிய காரணம். உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்ரேல் உள்ளே புகுந்து ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது.

இதில் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுத உதவிகள் தொடங்கி உளவு உதவிகள் வரை செய்தது ஹிஸ்புல்லா இயக்கம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கத்தை அவ்வப்போது இஸ்ரேலின் படைகள் தாக்குவது உண்டு. பாலஸ்தீன போர் மட்டுமின்றி சவுதியுடன் மோதல் தொடங்கி ஹிஸ்புல்லா இயக்கம் பல போர்களை மேற்கொண்டு வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கம் ஈராக்கின் குடையின் கீழ் வளர்ந்து நிற்கும் உலகின் மிகப்பெரிய இயக்கங்களில் ஒன்றாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+