7 ஆண்டு காத்திருந்து.. மெஹுல் சோக்ஸியை தூக்கிய இந்திய அதிகாரிகள்! பின்னணியில் இவ்வளவு பிளான் இருக்கா
டெல்லி: மோசடி மன்னன் மெஹுல் சோக்ஸி பெல்ஜியம் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். மெஹுல் சோக்ஸி கைது எப்படிச் சாத்தியமானது.. இதற்கு ஏழு ஆண்டுகள் இந்திய அதிகாரிகள் எந்தளவுக்கு முயன்றுள்ளனர்... இப்போது சரியான நேரத்தில் சோக்ஸி கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது அது குறித்து நாம் பார்க்கலாம்.
மோசடி மன்னன் மெஹுல் சோக்ஸி கைது என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் என நடக்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய அதிகாரிகள் எடுத்த தொடர் முயற்சிகளின் பலனாகவே இந்தக் கைது நடந்துள்ளது. இடையில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் விடாமல் முயன்ற இந்திய அதிகாரிகள் இதைச் சாத்தியமாக்கியுள்ளனர்.

குற்றச்சாட்டு என்ன
கீதாஞ்சலி குழும உரிமையாளராக இருந்த மெஹுல் சோக்ஸி, அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,636 கோடி மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மெஹுல் சோக்ஸி அவரது மருமகன் நீரவ் மோடி, அவரது மனைவி அமி மோடி மற்றும் அவரது சகோதரர் நீஷால் மோடி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2018ல் மெஹுல் சோக்ஸி இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில், அதன் பிறகே இந்த மாபெரும் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. அவர் ஆன்டிகுவா என்ற நாட்டில் பதுங்கி இருந்தார். அங்கு முதலீட்டுத் திட்டத்தின் மூலம் குடியுரிமையும் பெற்றார்.
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய சோக்ஸி
கடந்த 2021ஆம் ஆண்டில், அவர் டொமினிகன் குடியரசில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். அப்போதே அவரை இந்தியாவுக்கு நாடுகடத்திக் கொண்டு வர சிபிஐ முயன்றது. இருப்பினும் மெஹுல் சோக்ஸியின் வழக்கறிஞர்கள், அவர் சிகிச்சைக்காக ஆன்டிகுவாவுக்கு செல்ல வேண்டும் என்றும் சிகிச்சை முடிந்த பிறகு நிச்சயம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார் என்றார் டொமினிகன் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அப்போது சுமார் 51 நாட்கள் சோக்ஸி சிறையில் இருந்தார். அவர் பிரிட்டிஷ் குயின்ஸ் பிரிவி கவுன்சிலிடமிருந்து முறையிட்ட நிலையில், நாடுகடத்தும் முயற்சி வெற்றி பெறவில்லை. உடல்நிலையைக் காரணமாகக் காட்டி ஆன்டிகுவா நாட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர், டொமினிகன் குடியரசும் கூட அவர் மீதான சட்டவிரோத நுழைவு குற்றச்சாட்டுகளைக் கைவிட்டது..
தீவிர முயற்சி
இருப்பினும், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மெஹுல் சோக்ஸியை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்தது. அவரை தொடர்ந்து கண்காணித்ததில் கடந்த ஆண்டு, அவர் பெல்ஜியத்திற்கு சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து பெல்ஜியம் விசாரணை அமைப்பை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டன. சோக்ஸி ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதைத் தெரிவித்த இந்திய அதிகாரிகள், தேவையான ஆவணங்களையும் பகிர்ந்தனர்.
இதற்கிடையே சோக்ஸி சுவிட்சர்லாந்திற்குத் தப்பிச் செல்ல முயல்வதைத் தெரிந்து கொண்ட பெல்ஜியம் அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 12ம் தேதி அவரை கைது செய்தனர். சோக்ஸியின் மனைவி பிரீத்தி ஒரு பெல்ஜியக் குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது.. இதனால் பெல்ஜியத்தில் வசிப்பிட அட்டை போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து சோக்ஸி பெற்றதும் தெரிய வந்துள்ளது. அவர் இந்தியா மற்றும் ஆன்டிகுவாவின் குடிமகன் என்பதையும் பெல்ஜியம் நிர்வாகத்திடம் மறைத்துள்ளார்.
இந்திய அதிகாரிகள்
கடந்த பிப்ரவரி மாதம் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரான சோக்ஸியின் வழக்கறிஞர், அவர் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியத்தில் இருப்பதாகவும் இதனால் இந்தியா திரும்ப முடியாது என்றும் முறையிட்டனர். அதேநேரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இதை ஏற்க மறுத்த இந்திய அதிகாரிகள் அவரை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர். இப்படித் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் எடுத்த முயற்சியாலேயே அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications