ஆமா.. அது என்ன 'ஹவுடி' மோடி? அர்த்தம் இதுதான் பாஸ்!
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் கூட்டாக இணைந்து பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது.
இருப்பினும் ஹவுடி என்ற வார்த்தை இந்தியர்களுக்கு ரொம்பவே அறிமுகமில்லாத ஒரு வார்த்தை என்பது தான் உண்மை.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால், ஒருவேளை ஆங்கிலத்தில் ஹூஸ்டன் என்ற வார்த்தையின் தொடக்கத்தை முன்வைத்து இவ்வாறு ஒரு பெயர் வந்து இருக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
இதில் ஒரு சுவாரசியமான பொருள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதாவது டெக்சாஸ் மற்றும் பிற தென்மேற்கு அமெரிக்க மாகாணங்களில் 'ஹவ் டு யூ டூ' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம்தான் ஹவுடி என்ற சொல்வழக்கு.
சுமார், 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்க வரும் நரேந்திர மோடியை பார்த்து, எப்படி இருக்கிறீர்கள்.. என்று பொருள்படும் வகையில் ஹவுடி என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டது.
மோடி 2014 ஆம் ஆண்டு, முதன் முறையாக இந்திய பிரதமராக பதவிக்கு வந்தபிறகு, அமெரிக்காவில் பங்கேற்ற மூன்றாவது மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஹவுடி மோடி நிகழ்ச்சியாகும்.
முதல் கூட்டம் 2014ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் சதுக்கம் கார்டன் பகுதியில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம், 2016ஆம் ஆண்டு சிலிக்கான் வேலியில் நடைபெற்றது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications