For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகாகோவில் சுடப்பட்ட இந்திய மாணவர்.. முகத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் தாக்கப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்காவில் படித்து வரும் ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார். அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவர் முகத்தில் மிகவும் மோசமாக துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.

ஹைதராபாத் பகுதியை சேர்ந்த முகமது அக்பர் என்ற நபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். அவர் சிகாகோவில் உள்ள 'டேவ்ரி' பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் முதுநிலை பட்டம் படித்து வருகிறார்.

Hyderabad man shot in the face in Chicago park

இந்த நிலையில் அவர் நேற்று மர்ம நபர் ஒருவரால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டு உள்ளார். சாலையில் அவர் சென்று கொண்டு இருக்கும் போது அவரை வழிமறைத்த அந்த மர்ம நபர், முகமது அக்பர் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.

இதன்காரணமாக அவரது தொண்டை மற்றும் கன்னங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. தற்போது இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தற்போது இவரை சந்திப்பதற்காக இவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விரைந்துள்ளனர்.

English summary
A 30-year-old man named Mohammed Akbar from Hyderabad was shot in the face in Chicago by an unknown person. Akbar is student who went to the US to study Masters in Computer Systems Networking at DeVry University in Chicago America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X