ரஷ்யாவின் நம்பர் ஒன் இலக்கு நான் .. உக்ரைனை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் - உக்ரைன் அதிபர் உருக்கம்
கிவி: ரஷ்யாவின் இலக்கு நான் தான் என்றும், ஒருபோதும் உக்ரைனை விட்டு செல்ல மாட்டேன் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது நேற்று போர் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிர் பலி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் போர் உக்கிரமாக தொடர்ந்துவருகிறது. அனைத்து வழிகளிலும் உக்ரைன் மீது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவி வரை ரஷ்யா ஆக்கிரமித்து வந்துள்ளனர்.

உக்ரைன் அதிபர்
ரஷ்யா உக்ரைனில் முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமேர் செலன்ஸ்கிரஷியா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், ''என்னை நம்பர் ஒன் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனது குடும்பம்தான் அவர்களின் இரண்டாவது இலக்கு. உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர். நான் இங்கு தான் இருக்கிறேன். இங்கிருந்து எங்கும் செல்ல மாட்டேன்.

கீவ்
கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனால், நகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உக்ரைன் அரசு பணியாற்ற தேவையான அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுடன் ஒன்றாக நான் அரசு இல்லத்தில் தங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். கீவ் நகரை ரஷ்யா கைப்பற்றாமல் இருக்க கீவ் நகருக்கு வரும் அனைத்து வழிகளையும் உகரைன் தகர்த்து வருகிறது.

போர்
போர் தொடங்கி நடந்து கொண்டிருப்பதால், அந்நாட்டு 15 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் அனைவரும் ராணுவ வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் யாரும் போரில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் பத்திரமான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video

பயிற்சி
போரில் ஈடுபட உள்ள உக்ரைன் ஆண்களுக்கு ஏற்கெனவே ராணுவ பயிற்சி கொடுத்தது உக்ரைன். இந்நிலையில் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உதவும் என்று உக்ரைன் எதிர்பார்த்தது. ஆனால், எந்த நாடுகளும் உதவவில்லை என்றும், தாங்கள் தனித்து விடப்பட்டிருப்பதகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications