Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைவான் மீது சீனா கை வைத்தால்.. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு வரும்.. காரணம் "சிப்!"

Subscribe to Oneindia Tamil

தைபே: தைவான் மீது சீனா போர் தொடுக்கும் பட்சத்தில் உலக நாடுகள் முழுவதம் முடங்கும் நிலை உருவாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்படி சாத்தியம் என கேட்கிறீர்களா? காரணம் உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

Recommended Video

    Taiwan-ல் தற்போது என்ன நடக்கிறது? America-மீது கடும் கோபத்தில் China *World

    ஒருங்கிணைந்த சீனாவாக தைவான் இருந்தது. உள்நாட்டு போரை தொடர்ந்து 1949ல் தைவான் தீவில் மக்கள் குடியேறினர். தற்போது தனிநாடாக செயல்பட சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் ஒரு பகுதியாக தைவான் உள்ளதாக அந்நாடு கூறி வருகிறது.

    இந்நிலையில் தான் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுசி தைவான் செல்வதாக அறிவித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    போர் உருவாகும் சூழல்

    போர் உருவாகும் சூழல்

    சமீபகாலமாக தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக சீனா கூறி வருகிறது. இந்நிலையில் தான் சீனாவின் எதிர்பபையும் மீறி தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலுசி சென்றுள்ளார். இதனை காரணமாக வைத்து சீனா, தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தான் நேற்று நான்சி பெலுசி தைவான் வைபே நகருக்கு சென்றபோது சீனாவின் 21 போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் பறந்தன. இது சீனாவின் போர் முன்னோட்டம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

     உலக நாடுகள் முடங்கும்

    உலக நாடுகள் முடங்கும்

    இதற்கிடையே தான் தைவான் மீது சீனா போர் தொடுத்தால் அது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் முடங்க வைக்கும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் கச்சா எண்ணெயின் மீது தாக்கம் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் எகிறின. அதேபோல் தான் தைவான் மீது சீனா போர் தொடுத்தால் சிப்களின் உற்பத்தி பாதித்து உலக நாடுகள் முடங்கும் என கூறப்படுகிறது.

     தைவானில் 65 சதவீத சிப்புகள்

    தைவானில் 65 சதவீத சிப்புகள்

    அதாவது உலகில் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணு உபகரணங்களில் பெரும்பாலானவை தைவானில் தயாரிக்கப்பட்டவை தான். செல்போன்கள், லேப்டாப், கடிகாரம் உள்பட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களுக்கான சிப்புகள் தைவானில் தான் தயாரிக்கப்படுகின்றன. தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (டிஎஸ்எம்சி அல்லது TSMC) தான் உலகில் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கான சிப்புகளின் தேவையில் 65 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இதில் தைவானுக்கு அடுத்தபடியாக தென்கொரியா 18 சதவீதம், சீனா 5 சதவீதமும் பிற நாடுகள் 12 சதவீதமும் பங்காற்றுகிறது. டிஎஸ்எம்சி சார்பில் கடந்த 2021ல் ஏறக்குறை 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சிப் வர்த்தகம் நடைபெற்றது.

    சீனாவின் ஆசைக்கு இதுவும் காரணம்

    சீனாவின் ஆசைக்கு இதுவும் காரணம்

    தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வளர்ந்து இருந்தாலும் கூட கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பில் தைவான் தான் முன்னணியில் உள்ளது. தைவானை கைப்பற்ற சீனா துடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனென்றால் தைவானை இணைத்துவிட்டால் அது உலக நாடுகள் அனைத்தும் சிப் விஷயத்தில் சீனாவை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருக்கும். இதனால் தான் தைவானை தனிநாடாக அறிவிக்க சீனா மறுத்துவருகிறது.

    தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கலாம்

    தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கலாம்

    தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் டிஜிட்டல் மயத்தை நோக்கி பயணித்து வருகிறது. இதனால் எலக்ட்ரானிக் சிப்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட தொழில், அதிகரித்த ஸ்மார்ட்போன், கணினி, கார் விற்பனை உள்ளிட்டவற்றால் தொடர்ந்து சிப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியா உள்பட பல நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி செல்வதால் சிப் தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் தான் தைவான் மீது போர் தொடுத்தால் சிப் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    சீனாவை பிற நாடுகள் எதிர்க்கலாம்

    சீனாவை பிற நாடுகள் எதிர்க்கலாம்

    இதனால் சீனா, தைவானில் போர் தொடுத்தால் சிப் தயாரிப்பு பணிகள் முடங்கும். இது நடந்தால் ஒட்டுமொத்த நாடுகளும் பாதிப்பை சந்திக்கும். மேலும் தைவானுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் பல நாடுகள் எதிர்க்கலாம். அதாவது சீனாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை நாடுகள் முன்னெடுக்கலாம். இதனால் ஒருவேளை சீனா போர் தொடுத்தாலும் தைாவானின் சிப் தயாரிப்பு பணியால் பல நாடுகள் தைவானுக்கு உதவி செய்ய முன்வரலாம் என கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+