Imran Khan: இம்ரான் கானுக்கு என்ன ஆச்சு.. உயிரிழந்ததாக பரவும் தகவல்.. சகோதரி பகீர் வார்னிங்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் வைத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் சூழலில், அவரின் சகோதரரி அலீமா ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இம்ரான் கானின் தலை முடியை கூட தொடுவதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென இம்ரான் கானை பாகிஸ்தான் ராணுவம் சிறையில் வைத்து கொலை செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி தொடர்ந்து பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இதன் காரணமாக Where is Imran Khan என்ற ஹேஷ்டாக் சோசியல் மீடியாவில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் அடியாலா சிறைத்துறை நிர்வாகம் இம்ரான் கான் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், இம்ரான் கான் நலமுடன் இருக்கிறார். வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் வேறு சிறைக்கு மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இம்ரான் கானை தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று சகோதரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு இம்ரான் கான் சகோதரி அலீமா அளித்துள்ள பேட்டியில், கடந்த 6 முதல் 7 மாதங்களாக ஏராளமான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். சில நேரம் இம்ரான் கானை சந்திக்க அனுமதிப்பார்கள். சில நேரம் எங்களில் ஒருவரை மட்டுமே அனுமதிப்பார்கள்.
சில நேரம் சிறையில் அதிக நேரம் காத்திருக்க வைப்பார்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இம்ரான் கானை எங்களால் சந்திக்க முடிந்தது. அதற்கு இம்ரான் கான் ஒரு வழக்கை எதிர்கொண்டிருந்ததெ காரணமாகும். குடும்பத்தினர், ஊடகங்களுக்கு அனுமதியின்றி வெளிப்படையான விசாரணை நடக்கவில்லை என்றால், மீண்டும் இந்த வழக்கில் ஆஜராக மாட்டோம் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதியின் உத்தரவால், வழக்கை தொடர முடிவு செய்தோம். இப்படிதான் இம்ரான் கானை சந்திக்க முடிந்தது. இந்த வழக்குகள் ஏற்கனவே நிரபராதி என்று இம்ரான் கான் நிரூபித்தவைதான். 5,6 வாரங்களுக்கு முன்பாகவே விசாரணை முடிவடைந்துவிட்டது. நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கூறினார்கள். ஆனால் திடீரென டிசம்பர் 28ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இம்ரான் கானுக்கு எதிரான சதி நடப்பதாக நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இம்ரான் கானின் சகோதரி, இம்ரான் கானை நேரில் சந்திக்கும் வரை எங்களால் எதையும் சொல்ல முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இம்ரான் கானின் தலைமுடியை கூட யாராலும் தொட முடியாது. அப்படி தொட்டால்.. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதை பாருங்கள் என்று வார்னிங் கொடுத்துள்ளார்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications