‛2024ல் மீண்டும் மோடி’ ஜெர்மனியில் அதிர்ந்த கோஷம்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்கள் ‛2024 மோடி ஒன்ஸ்மோர்' என ஆர்வமாக தொடர்ந்து கோஷமிட்டது அரங்கத்தை அதிர செய்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
கொரோனா பரவல் காரணம் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளாமல் இருந்தார். தற்போது உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.
இதனால் பிற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பா சென்றுள்ளார்.

ஜெர்மனியில் பிரதமர் மோடி
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 25 நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்ற பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார். அங்கு ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கால்சினுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பாட்ஸ்டேமர் பிளாட்ஸில் உள்ள திரையரங்கில் இந்தியர்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அரங்கத்தை அதிரவைத்த கோஷம்
பிரதமர் நரேந்திர மோடி அரங்குக்கு வருவதற்கு முன்பு 2024 மோடி ஒன்ஸ்மோர் என அவர்கள் கோஷமிட்டனர். இந்த கோஷம் அரங்கத்தை அதிர செய்தது. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 2024, 2019 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான நிலையில் 2024ல் நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று அவர் ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

மோடி மகிழ்ச்சி
இதில் பிரதமர் மோடி பேசுகையில், ‛‛ஜெர்மனியில் இந்தியாவின் குழந்தைகளை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களை சந்திப்பது என்பது எனக்கான அதிர்ஷ்டம். பலர் ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் இருந்து பெர்லினுக்கு இங்கு வந்திருக்கிறீர்கள். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியர்கள் என்பவர்கள் இந்தியாவில் வாழ்பவர்கள் மட்டுமல்ல. அதில் நீங்களும் அடங்குவீர்கள்.
Recommended Video

இன்று டென்மார்க்கில் மோடி
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் தலைமையில் 6வது இந்தியா-ஜெர்மனி மாநாடு நடந்தது. இதில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தனாது. ஜெர்மனியை தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மெட்டே ப்ரெட்ரிக்சன் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று கோபன்ஹேகன் நகருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள 2வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டில் மோடி பங்கேற்கிறார். பிறகு இந்தியா வரும் வழியில் பாரீசில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications